/* */

அறிவு சார்ந்த கல்வி பாடத்திட்டங்கள் தேவை: இஸ்ரோ விஞ்ஞானி சிவதாணுபிள்ளை

காஞ்சிபுரம் சுப்புராய முதலியார் மேல்நிலைப்பள்ளியில் தியாகம் போற்றுவோம் இயக்க நிகழ்வில் மாணவர்களுடன் கலந்துரையாடினார்

HIGHLIGHTS

அறிவு சார்ந்த கல்வி பாடத்திட்டங்கள் தேவை: இஸ்ரோ விஞ்ஞானி  சிவதாணுபிள்ளை
X

 காஞ்சிபுரத்தில் பள்ளி மாணவர்கள் வைத்த அறிவியல் கண்டுபிடிப்புகளை பார்வையிட்ட இஸ்ரோ விஞ்ஞானி. டாக்டர். சிவதாணு பிள்ளை அந்த படைப்புகளில் கையெழுத்திட்டார்

காஞ்சிபுரம் கா.மு. சுப்புராய முதலியார் மேல்நிலைப் பள்ளியில், தியாகம் போற்றுவோம் இயக்கத்தின் சார்பில் 75 வது சுதந்திர தினத்தினை கொண்டாட வரும் நிலையில், இஸ்ரோ விஞ்ஞானி பத்மபூஷன் டாக்டர்.சிவதாணு பிள்ளை மாணவர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக பள்ளியில் மாணவர்கள் அமைத்திருந்த அறிவியல் கண்டுபிடிப்பு கண்காட்சிகளை பார்வையிட்டு மாணவருடன் உரையாடினார். நேற்று தனது 75 வது பிறந்தநாளை கொண்டாடிய சிவதானு பிள்ளைக்கு மாணவர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.விழாவில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவியர் பலரின் கேள்விகளுக்கு அவர்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் விளக்கங்களை அளித்தார்.

இதன்பின் செய்தியாளரிடம் பேசுகையில் , இந்தியாவின் பொருத்தவரை தனி நபர் வளர்ச்சி தவிர்த்து பொது வளர்ச்சியை காணும் போதுதான் இளைஞர்கள் மேம்படுவர். புதிய காலகட்ட இளைஞர்கள் விஞ்ஞான அறிவு வளர்ச்சியில் திறன் பட செயலாற்றி வருகின்றனர். அவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கில் கொண்ட செல்லவேண்டும்.

ஆசியர்கள் பாடங்களை மட்டும் கற்றுத்தராமல் கூடுதலான அறிவு வளர்ச்சியை அவர்களுக்கு தர வேண்டும் எனவும், அவர்களுக்கு அறிவு சார்ந்த கல்வி திட்டத்தினை அளிக்கும் நிலையில் நாம் உள்ளதாகவும்,. அவர்களுடைய கற்பனைத் திறன் விடாமுயற்சி உள்ளிட்டவைகளை ஊக்கி வைத்தால் நாடு மிகப்பெரிய வளர்ச்சி பெறும். இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஆதித்யா என்ற பெயரில் சூரியனுக்கும் செயற்கைக்கோள் விட திட்டமிட்டுள்ளதாகவும் , சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் உள்ள நிலைப்புள்ளியில் இந்த செயற்கைக்கோள் நிறுத்தப்படும் என்றார் சிவதாணு பிள்ளை.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் , ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.



Updated On: 16 July 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...