/* */

ஸ்ரீபெரும்புதூரில் மக்களை தேடி மருத்துவ‌ம் திட்டத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்

மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 23 ஆயிரத்து 414 பேர் பயனடைய உள்ளதாக அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூறினார்

HIGHLIGHTS

ஸ்ரீபெரும்புதூரில் மக்களை தேடி மருத்துவ‌ம்  திட்டத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்
X

ஸ்ரீபெரும்புதூரில் மக்களை தேடி மருத்துவ‌ம் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் தா.மோ. அன்பரசன்

மக்களைத் தேடி மருத்துவம் எனும் திட்டத்தினை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் துவக்கி வைக்கிறார் இத்திட்டப்படி விரிவான மருத்துவ சேவை மக்கள் இல்லங்களுக்கு தேடிவரும் இத்திட்டத்தில் தொற்று நோய்களை கண்டறிந்து அவற்றை தொடர் கண்காணித்து சுகாதார சேவைகள் அளிக்கப்படும்.

இத்திட்டத்தினை இன்று அமைச்சர் தா மோ அன்பரசன் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் மாம்பாக்கம் பகுதியில் துவக்கி வைத்து நோயாளிகளுக்கு மருந்துகளை வழங்கினார்.

இதில் சிறப்புரையாற்றிய அமைச்சர், இத்திட்டத்தின் மூலம் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ள 40 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் தமிழக அரசால் இலவசமாக இரண்டு மாதத்திற்கான மாத்திரைகள் அவர்கள் வீடுகளுக்கு சென்று மகளிர் நல தன்னார்வத் தொண்டர்கள் மூலமாக வழங்கப்படும். பக்கவாதம், முடக்குவாதம், தசை தளர்வு போன்ற வியாதிகளுக்கு பிசியோதெரபிஸ்ட் செவிலியர்கள் கூறும் மூலம் சிகிச்சை அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் கண்டறியப்பட்டுள்ள சுமார் 22,000 பேர் இதன் மூலம் பயன் அடைவார்கள் எனவும் 537 நபர்கள் பிசியோதெரபி சிகிச்சை மற்றும் 877 நோய் ஆதரவு சிகிச்சை மேற்கொண்டு பயன் அடைவார்கள். ஆகவே பொதுமக்கள் இத்திட்டத்தினை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டார்

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்த்தி, ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை, காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் சுகாதார நலப் பணிகள் துணை இயக்குனர் மருத்துவர் பழனி உள்ளிட்ட சுகாதாரத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Updated On: 5 Aug 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்