/* */

அரசியலமைப்பை அறிந்து கொள்ளுங்கள் - எஸ்.பி சண்முகம்..!

காஞ்சிபுரம் சங்கரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் முதல் முறை வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

அரசியலமைப்பை அறிந்து கொள்ளுங்கள் - எஸ்.பி சண்முகம்..!
X

சங்கரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில்  நடைபெற்ற விழாவில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் கட்டாயம் வாக்களிப்போம் என பயிற்சி ஆட்சியர் சங்கீதா மற்றும் எஸ் பி சண்முகம் முன்னிலையில் அனைவரும் உறுதிமொழி ஏற்ற போது.

வாக்களிப்பதை தவிர்ப்பது நல்லதல்ல எனவும் , முதல் தலைமுறை வாக்காளர்கள் அரசியல் அமைப்பு பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் முதல் முறை வாக்களிக்கும் இளம் வாக்காளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

எதிர்வரும் ஏப்ரல் 19ஆம் தேதி இந்திய நாடாளுமன்றத்திற்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு என்ற இலக்குடன் தமிழக தேர்தல் ஆணையம் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மூலம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில், முதல் முறை வாக்களிக்கும் இளைஞர்களை குறி வைத்து 100% வாக்கு பதிவு என அவர்களுக்கு அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது

அவ்வகையில் காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூரில் உள்ள சங்கரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் முதல் முறை வாக்களிக்க உள்ள இளம் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி பயிற்சி ஆட்சியர் சங்கீதா மற்றும் எஸ் பி சண்முகம் தலைமையில் நடைபெற்றது.


இதில் கலந்துகொண்ட முதல் முறை வாக்காளர்கள் தாங்கள் கட்டாயம் வாக்களித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம் என உறுதிமொழி ஏற்றனர்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய எஸ்பி சண்முகம் , முதல் முறை வாக்களிக்கும் இளைஞர்கள் இந்திய அரசியல் அமைப்பு குறித்து அறிந்து கொள்ள வேண்டும் எனவும் வாக்களிக்காமல் தவிர்த்து விட்டு, அதன்பின் யாரும் எதையும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை கூறக்கூடாது என தெரிவித்தார்.

இளைஞர்களுக்கு விழிப்புணர்வு இருந்தால் நம்மளுடைய தேவைகளை எவ்விதம் வேட்பாளருக்கு தெரிவிப்பது, அதன் மூலம் உருவாக்கப்படும் அரசு நமக்கு செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் உணர்த்தலாம் என தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில் பேசிய பயிற்சி ஆட்சியர் சங்கீதா , வாக்குப்பதிவு அனைவரும் பதிவு செய்ய வேண்டும் எனவும் அது நமது கடமை எனவும், வாக்குப்பதிவு நடைபெறும் நாள் என்று நமது வாட்ஸ் அப்பில் அனைவரும் வாக்களிப்போம் என்ற ஸ்டேட்டஸ் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவோம் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் இளைஞர் நலன் மேம்பாட்டு அலுவலர் ஜெயசித்ரா பல்கலைக்கழக முதல்வர் பேராசிரியர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்

Updated On: 4 April 2024 11:00 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  5. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  6. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  7. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  8. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  10. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு