/* */

வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவ விழா கடந்த 31ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது

HIGHLIGHTS

வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
X

வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான இன்று திருத்தேரோட்ட வைபவத்தில் கலந்து கொண்ட பக்தர்கள்

108 திவ்ய தேசங்களில் ஒன்றான உலகப் பிரசித்தி பெற்ற அத்தி வரதர் திருக்கோவில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் வைகாசி உற்சவத்தை முன்னிட்டு காலை மற்றும் மாலை இரு வேலைகளிலும் வரதராஜ பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார் இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினம் தரிசனம் செய்து வந்தனர்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவம் 7ம் நாள் முக்கிய உற்சவமான திருத்தேர் உற்சவம் துவங்கி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.

ஐந்து நிலைகள் கொண்ட 76 அடி உயர திருத்தேரில் ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளி காட்சி அளித்த படி வரதராஜ பெருமாள் பவனி வருகிறார்.

திருத்தேர் உற்சவத்தை முன்னிட்டு அதிகாலையிலேயே 3.45 மணி அளவில் வரதராஜ பெருமாளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, ஸ்ரீதேவி பூதேவியுடன் தாயார் சடாரியும் மேளதாளங்கள் முழங்க, கோவிலில் இருந்து ராஜநடையில் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள தேரடி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள திருத்தேரில் எழுந்தருள செய்தனர்.


ஐந்து நிலைகள் கொண்ட 76 அடி உயரம் உள்ள திருத்தேரில் ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளிய வரதராஜ பெருமாளை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து கோவிந்தா கோவிந்தா கோஷமிட்டு வணங்கி வழிபட்டனர்.

பின்னர் மேள தாளங்கள், தாரை தப்பட்டைகள் முழங்க திருத்தேரினை அமைச்சர் தா.மோ. அன்பரசன், காஞ்சிபுரம் எம்எல்ஏ சி.வி.எம்.பி. எழிலரசன் மற்றும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

இந்த தேர் காந்தி சாலையில் புறப்பட்டு காமராஜர் தெரு 4 ராஜ வீதி சுற்றி மீண்டும் நிலைக்கு வந்து சேரும். மேலும் தேர் திருவிழாவை முன்னிட்டு மிலிட்டரி ரோடு புதிய ரயில்வே நிலையம் பழைய ரயில்வே நிலையம் பெரியார் நகர் போன்ற பகுதிகளில் தற்காலிகமாக நான்கு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.


திருத்தேர் உற்சவத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சார்ந்த சுமார் 1500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 6 Jun 2023 3:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்