/* */

காஞ்சிபுரம் வைகுந்தப் பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம் தொடங்கியது

காஞ்சிபுரம் அருள்மிகு வைகுந்தவல்லி சமேத வைகுந்தப் பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது

HIGHLIGHTS

காஞ்சிபுரம் வைகுந்தப் பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம் தொடங்கியது
X

கொடியேற்ற நிகழ்விற்கு வந்த ஸ்ரீ வைகுந்தவல்லி சமேத வைகுந்த பெருமாள்.

நகரேஷீ காஞ்சி எனும் கூறப்படும் காஞ்சிபுரம் மாநகரில் பேருந்து நிலையம் அருகே தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது அருள்மிகு வைகுந்தவல்லி சமய வைகுண்ட பெருமாள் திருக்கோயில்.

ஸ்ரீபரகாலன் என்னும் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாஸனம் செய்யப்பட்டும் , ஸ்ரீராமானுஜர், ஸ்ரீ மணவாள மாமுனிகள் முதலான ஆச்சாரியர்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்டதுமானது ஸ்ரீ வைகுந்த பெருமாள் சன்னதி.

சேர சோழ பாண்டியர்களை வென்ற பல்லவன், வில்லவன், மல்லையர் கோன் முதலிய பல அரசர்களின் திருப்பணிகளை கொண்டதுமான ஸ்ரீ பரமேஸ்வர விண்ணகரம் எனும் திவ்வியதேசமாகும்.

இத்திவ்வய தேசத்தின் வைகாசி பிரம்மோற்சவ விழா இன்று காலை 5மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்றத்திற்கு முன்பாக ஸ்ரீ வைகுந்தவல்லி சமேத வைகுண்ட பெருமாள் வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கொடி மரத்தடியில் எழுந்தருளினார்.

அதப்பின் நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வருகின்ற இருபத்தி எட்டாம் தேதி கருட சேவை வைபவமும், ஜூன் ஒன்றாம் தேதி திருத்தேர் உற்சவமும் நடைபெற உள்ளது.

Updated On: 26 May 2022 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?