/* */

காஞ்சிபுரம் மூத்தகுடிமக்களுக்கு உதவி தேவையா? காவல் உதவி எண் அறிவிப்பு!

மூத்த குடிமக்கள் மருத்துவ உதவி தேவைப்படும் பட்சத்தில் காவல் துணையை தொடர்பு கொள்ள காஞ்சிபுரம் மாவட்ட எஸபி கேட்டுக்கொண்டார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மூத்தகுடிமக்களுக்கு உதவி தேவையா? காவல் உதவி எண் அறிவிப்பு!
X

காஞ்சிபுரம் மாவட்ட காவல் நிலையம்

தமிழக அரசு இரண்டாம் அலை கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு நாளை முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது.

இச்சமயத்தில் வயது முதிர்ந்த மூத்த குடிமக்களுக்கு மருத்துவ உதவிகளோ அல்லது வேறு ஏதேனும் உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் அலுவலகத்திலுள்ள உள்ள கட்டுப்பாட்டு அறை எண்களான 044- 27239200 , 044 - 27236111 க்கு தகவல் தெரிவிக்கலாம்.

அது சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் அதற்காக நியமிக்கப்பட்டுள்ள காவலர்கள் மூலம் அவர்களது வீட்டுக்கே சென்று அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வார்கள்

மேலும் ஊரடங்கின் போது பொது மக்கள் முக கவசம் , தனிமனித இடைவெளியை கடைபிடித்து வீட்டிலேயே இருக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா கேட்டுக் கொண்டுள்ளார்.

Updated On: 23 May 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?