/* */

காஞ்சிபுரம் நவசக்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக விழா கோலாகலம்..

Kanchipuram Navashakti Vinayagar Temple-காஞ்சிபுரம் நவசக்தி விநாயகர் ஆலயம் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கபட்டு 12 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் நவசக்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக விழா கோலாகலம்..
X

காஞ்சிபுரம் நவசக்தி விநாயகர் திருக்கோயில் மகா கும்பாபிஷேக  விழாவில் கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டது.

Kanchipuram Navashakti Vinayagar Temple-காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட நடேசன் நகரில் புனரமைக்கப்பட்ட அருள்மிகு நவசக்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

கோயில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற ஆலயங்கள் மட்டுமில்லாமல் , நகரில் உள்ள பல்வேறு பகுதியில் உள்ள சிறு ஆலயங்களும் தற்போது புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேக விழாக்கள் நடைபெற்று வருகிறது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட நடேசன் நகர் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு நவசக்தி விநாயகர் ஆலயம்.

கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த ஆலயம் தற்போது ரூபாய் 15 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்டு துர்க்கை , திருச்செந்தூர் முருகன் , நவகிரகங்கள் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட சுவாமிகள் நிறுவப்பட்டு பணிகள் கடந்த வாரம் நிறைவு பெற்றது.

இதனைத் தொடர்ந்து நேற்று மாலை கணபதி ஹோமத்துடன் துவங்கி, பல்வேறு சிறப்பு பூஜை மற்றும் ஹோமங்கள் நடைபெற்றது.

இன்று அதிகாலை 7 மணி அளவில் சிறப்பு பூஜைகளையும் தொடங்கிய சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கலச புறப்பாடு நடைபெற்றது.

நாதஸ்வரம் , கைலாய வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் மூலவரான நவசக்தி விநாயகர், மூலவர் விமான கோபுரம் , முகப்பு விநாயகர் திருச்செந்தூர் முருகன் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களுக்கும் புனித நீரால் மகா கும்பாபிஷேகம் நடத்தினர்.

இவ்விழாவில் அப்பகுதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு மகா கும்பாபிஷேகம் மற்றும் விநாயகர் சிறப்பு தரிசனத்தை கண்டு அருள் பெற்றனர்.

விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் புனித நீர் , விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது. நவசக்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக விழாவினை தலைவர் பிரபுராஜ் , செயலாளர் லோகநாதன், பொருளாளர் கோமகன் உள்ளிட்டோர் சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 22 March 2024 6:31 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  3. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  4. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  5. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்
  6. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  7. வீடியோ
    🔴LIVE : சத்யராஜ் மீண்டும் சர்ச்சை பேச்சு | WEAPON Movie Press Meet...
  8. கோவை மாநகர்
    கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கூரை சரிந்து விபத்து ; டூவிலர்கள்
  9. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு