/* */

குரூப்-1 தேர்வுக்கு தாமதம்.. அனுமதிக்காததால் நுழைவுச் சீட்டை கிழித்து எறிந்த இளைஞர்கள்..

காஞ்சிபுரத்தில் குரூப்-1 தேர்வுக்கு தாமதமாக சென்ற இளைஞர்களை தேர்வு எழுத அனுமதிக்காததால் அவர்கள் நுழைவுச் சீட்டை கிழித்து எறிந்து சென்றனர்.

HIGHLIGHTS

குரூப்-1 தேர்வுக்கு தாமதம்.. அனுமதிக்காததால் நுழைவுச் சீட்டை கிழித்து எறிந்த இளைஞர்கள்..
X

காவல் துறை அதிகாரியிடம் வாக்குவாதம் செய்த இளைஞர்கள்.

தமிழகம் முழுவதும் துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 92 காலி பணியிடங்களுக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வானயம் மூலம் நவம்பர் 18 ஆம் தேதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுமார் 3.2 லட்சம் பேர் 92 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்திருந்தனர்.இதற்காக தமிழக முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் 42 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட அறைகள் தயார் செய்யபட்டு தேர்வு இன்று நடைபெற்றது.

தேர்வுகள் காலை 9:30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற்றது. 200 கேள்விகளுக்கு தேர்வர்கள் பதில் அளிக்க வேண்டும் எனறும் தேர்வு எழுதுபவர்கள் காலை 9 மணிக்கு முன்னரே தேர்வு மையத்திற்குள் வர வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் அறிவித்திருந்தது.


காஞ்சிபுரம் ஏனாத்தூர் பகுதியில் அமைந்துள்ள சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குரூப் ஒன் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து தேர்வர்களுக்கு இந்த மையம் ஒதுக்கியது குறித்த ஹால் டிக்கெட் வழங்கப்பட்டு இருந்தது.

அதன்படி, இன்று காலை 8 மணி முதலே தேர்வு எழுதுவோர் பல்வேறு இடங்களில் இருந்து தேர்வு மையத்திற்கு வந்த நிலையில் சோதனைக்கு பிறகு அவர்கள் 9 மணி வரையில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். 9 மணி நிறைவு பெற்ற பின் கல்லூரி கேட் மூடப்பட்டு கால தாமதமாக வந்த அனைவரும் அனுமதிக்க மறுக்கப்பட்டனர்.

ஒரு நிமிடம் இரண்டு நிமிடம் என காலதாமதமாக வந்தால் தேர்வுகளுக்கு கூட அனுமதிக்கப்படாததால், அந்தப் பகுதியில் சிறிது கூச்சலும் வாக்குவாதமும்‌ நிலவியது. சிறிது நேரம் ஆக ஆக தேர்வு எழுத தாமதமாக வந்தோரின் எண்ணிக்கை அதிகரித்ததால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

தேர்வர்கள் காவல் துறை அதிகாரிகள் மற்றும் தேர்வு கண்காணிப்பாளர் அலுவலர்களிடம் பல்வேறு காரணங்களை கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தேர்வு மையம் செல்வதற்கு காஞ்சிபுரத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டாலும் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவைகளில் தேர்வர்கள் வருகை புரிந்த போது தமால்வார் தெரு அருகே உள்ள ரயில்வே கேட் மூடப்பட்டு இருந்தது.

காஞ்சிபுரம் புதிய ரயில்வே நிலையத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு அந்த வழியாக செல்லும் ரயில் நிலையில் இந்த கேட் மூடப்படுவது வழக்கம். குறைந்தபட்சம் ஐந்து நிமிடம் முன்பு இந்த கேட் மூடப்பட்டு ரயில் பழைய ரயில்வே நிலையம் அடைந்த பின் தான் ரயில்வே சிக்னல் கிடைத்து கேட் திறக்கப்படும்.

இதுபோன்ற நிலையை அறியாத தேர்வர்கள் பலர் இதில் இன்று சிக்கியதால் தங்களின் பல மாத கடின உழைப்பு வீணாக போனதால் காவல்துறை மற்றும் அலுவலரிடம் கெஞ்சிய நிலையில் எந்தவித பயனும் கிடைக்கவில்லை. காவல்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தவர்களிடம், தேர்வு என்பது பல நாட்களுக்கு முன்பே தெரியும் நிலையில் அந்த தேர்வு மையம் குறித்து விசாரித்து முறையான காலநிலையில் தேர்வுக்கு செல்ல வேண்டுமென காவல் துறை அதிகாரிகள் அறிவுரை கூறினர்.

ரயில் கேட் மூடப்பட்டதால் தாங்கள் தாமதமாக வந்ததாக கூறுவதை தேர்வு அலுவலக நிர்வாகம் ஏற்காது எனவும், இது குறித்த விழிப்புணர்வு உங்களுக்கு தான் இருக்க வேண்டும் என அறிவுரையை கூறிய காவல் துறையினர் தேர்வு எழுத தாமதமாக வந்தவர்களை திருப்பி அனுப்பி வைத்தனர்.

சில நொடிகளில் தங்களது கடின உழைப்பு வீண் போனதால் பலர் கண்கலங்கி அப்படியே சென்றனர். பலர் தங்களது தேர்வு சீட்டை கிழித்து எரிந்து ஆத்திரத்திலும் சென்றனர். எது எப்படி இருந்தாலும் தேர்வு மையத்திற்கு செல்லும் நேரம் சில மணி துளிகள் முன்பாக இருந்தால் மட்டுமே பதட்டங்களை தவிர்த்து சிறப்பான முறையில் தேர்வு எழுதி அதில் வெற்றி பெற முடியும்.

தேர்வுக்கு தயாராகும் பயிற்சி காலத்திலும் சரி, பள்ளி காலத்திலும் சரி பலமுறை அறிவுரை கூறினாலும் தற்போது வரை அலட்சியமாகவே இந்தக் கால இளைஞர்கள் இருப்பதை கண்கூடாக காண முடிந்தது.

Updated On: 19 Nov 2022 7:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  2. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  3. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  4. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  5. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  6. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  7. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  8. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  9. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!
  10. சினிமா
    யாரிந்த ஷாலின் ஸோயா..?