/* */

காஞ்சிபுரம்: குடிசை வீட்டில் தீ விபத்து ₹3லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

காஞ்சிபுரம் கோனேரிக்குப்பம் பகுதியில் தீடிரென குடிசை வீடு தீப்பற்றி எரிந்து பொருட் சேதம் ஏற்பட்டது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம்: குடிசை வீட்டில் தீ விபத்து  ₹3லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்
X

காஞ்சிபுரம் கோனேரிகுப்பம் புதுநகர் பகுதியில் வசித்து வருபவர் சுபத்ரா. இவரது கணவர் ராவணன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியின்றி இறந்துவிட தனது மகள் சுஜித்ரா வயது(13),மகன் விக்ரம் வயது(12)ஆகியோருடன் வசுத்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை தனது வீட்டின் அருகிலுள்ள அம்மா வீட்டிற்கு தனது பூட்டிவிட்டு குழந்தைகளுடன் சென்றுள்ளார்.

இந்நிலையில் இவரது குடிசை வீடானது இரவு தீடிரென தீப்பற்றி எரிந்தது. இதனையெடுத்து அருகிலுள்ள பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.

தீ விபத்தில் வீட்டானது முற்றிலும் எரிந்து உடை, கட்டில், பீரோ, பணம், நகை என சுமார் 3லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. இது குறித்து தகவலறிந்த தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்தின்கு விரைந்து வந்து இத்தீவிபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து மின்கசிவின் காரணமாக தீவிபத்து ஏற்பட்டதா , அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 5 Dec 2021 5:39 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்