/* */

காஞ்சி ஸ்ரீ ஏகாம்பரநாதர் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம்

பஞ்சபூத தலங்களில் ஒன்றான ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோயில் பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

காஞ்சி ஸ்ரீ ஏகாம்பரநாதர் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம்
X

காஞ்சி ஏகாம்பரநாதர் பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் நிகழ்வில் ஸ்ரீ ஏகாம்பரநாதர் சார்பாக அம்மனுக்கு தாலி சாற்றும் நிகழ்வு.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சுவாமி- ஏலவார் குழலி அம்மனுக்கு அதிகாலை நேரத்தில் நடைபெற்ற பங்குனி உத்திர திருக்கல்யாணம் பெருவிழா உற்சவத்தை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய திருமண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.

பஞ்சபூத ஸ்தலங்களில் பிருத்வி எனும் மண் ஸ்தலமாக விளங்கும் 3000 ஆண்டுகள் பழமையான காஞ்சிபுரம் ஏலவார்குழலி சமேத ஶ்ரீ ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா உற்சவம் கடந்த மாதம் 26 ஆம் தேதி முதல் கொடியேற்றத்துடன் நாள்தோறும் துவங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

அதன்படி பதினோராம் நாள் அதிகாலை ஏகாம்பரநாதர் சுவாமிக்கும் ஏலவார்க் குழலி அம்மன் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு ஏலவார்குழலி அம்மனுக்கும் ஏகாம்பரநாதர் சுவாமிக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்து மல்லிகைப்பூ, ரோஜாப்பூ, மனோரஞ்சிதப்பூ குருவி வேர், ஏலக்காய் மாலைகள் அணிவித்து மணமக்களாக ஆயிரம் கால் மண்டபத்தின் மேலே உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

காஞ்சி ஏகாம்பரநாதர் பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம்

பின்னர் அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஒலிக்க, கோவில் அர்ச்சகர்கள் சடங்கு சம்பிரதாயங்களை செய்ய ஏலவார் குழலி அம்மனுக்கு ஏகாம்பரநாதர் சுவாமி மாலை மாலை மாற்றி அணிவித்து கொண்டு மாங்கல்யத்தை கட்டும் பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கோலாகளமாக நடைபெற்று முடிந்தது.

அதிகாலை நேரத்தில் நடைபெற்ற திருமணத்தை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து பார்த்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் பங்குனி உத்திர திருக்கல்யாணத்திற்கு முன்பு கோபம் கொண்டு சென்ற ஏலவார்குழலி அம்மையை சமரசம் செய்து அழைத்து உடன் வந்த ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் மற்றும் ஆகாச கன்னி அம்மன் .

முன்னதாக ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவ விழாவில் பத்தாம் நாள் நேற்று இரவு மணமகள் அழைப்பு வெகு விமர்சையாக நடைபெற்றன.

காஞ்சிபுரம் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா பத்தாம் நாள் காலை சபாநாயகர் வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து கோவிலில் வந்தடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து திருக்கல்யாண உற்சவத்தில் ஸ்ரீ ஏகாம்பரநாதரிடம் கோபம் கொண்டு ஸ்ரீ ஏலவார்குழலி தனது தாய் வீடான ஒக்கப்பிறந்தான் குளம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஆகாய கன்னி அம்மன் மண்டபத்தில் எழுந்தருளினார்.

ஸ்ரீ ஏலவார்குழலியை சமாதானப்படுத்த காஞ்சி காமாட்சி அம்மன், ஸ்ரீ ஆகாய கன்னி அம்மன் ஆகியோர் சமாதானப்படுத்தி இரவு மணமகள் அழைப்பாக முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து ஸ்ரீ ஏகாமநாதர் கோவிலில் வந்தடைந்தனர்.

மேலும் திருகல்யாண நிகழ்ச்சியில் சிவபெருமான் கோபத்தை குறைக்க வாணிய செட்டியார் சமுதாய பரம்பரையை சேர்ந்த குடும்பத்தினர் குருவி வேர், பன்னீர் ரோஜா, தும்பை பூ ஆகியவைகளை 10 நாட்கள் விரதத்துடன் காவடி போல் தோளில் சுமந்து வாயில் துணி கட்டிய படி கோவிலுக்கு கொண்டு வந்து சிவபெருமானின் அபிஷேக நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்

Updated On: 5 April 2023 4:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்