/* */

புராண காலத்திலேயே சுயமரியாதை கொள்கைக்கு உதாரணம் பழனிமுருகனே: லியோனி பேச்சு

காஞ்சிபுரம் மாநகர திமுக சார்பில் தமிழக முதல்வரின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் கருத்தரங்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

புராண காலத்திலேயே சுயமரியாதை கொள்கைக்கு உதாரணம் பழனிமுருகனே: லியோனி பேச்சு
X

காஞ்சிபுரம் மாநகர திமுக சார்பில் முதலமைச்சரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் கருத்தரங்க பொதுக்கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் லியோனி.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் மாநகரம் திமுக சார்பில் மாபெரும் கருத்தரங்க பொதுக்கூட்டம் மாநகர திமுக செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநகர அவை தலைவர் செங்குட்டுவன், பகுதி கழக செயலாளர் தசரதன் வரவேற்புரையாற்ற, மாநகரத் துணைச் செயலாளர் ஜெகநாதன் நிர்மலா, முத்துச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக கழக செயலாளரும் , உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான சுந்தர் மற்றும் திமுக மாநில மாணவர் அணி செயலாளரும், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் சிறப்புரை ஆற்றினர்.


கருத்தரங்க கூட்டத்தில் *பெரியாரின் பேரன் தளபதியார்* எனும் தலைப்பில் கவிஞர் இனியவனும் , *கலைஞர் வழியில் தளபதியார்* என்ற தலைப்பில் பேராசிரியர் விஜயகுமாரும் சிறப்புரை ஆற்றினர்.

நிறைவாக தமிழ்நாடு பாடநூல் கழக தலைவரும் பட்டிமன்ற புகழ திண்டுக்கல் லியோனி நடுவராக இருந்து சிறப்புரை ஆற்றினார். இக்கூட்டத்தில் பேசிய லியோனி, திராவிட மாடல் ஆட்சி புரிந்து வரும் திராவிட நாயகன் ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடுவது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.

குறிப்பாக காஞ்சிபுரம் அண்ணா பிறந்த மண்ணில் நடைபெற்ற கருத்தரங்க பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு கிடைத்த அங்கீகாரமாக நினைக்கிறேன். கடந்த 18 மாத காலமாக எண்ணற்ற பல திட்டங்களை தமிழக மக்களின் நலனுக்காக அறிமுகப்படுத்தி தன்னலமற்ற தொடர் பணிகளை மேற்கொண்டு வரும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பல்லாண்டு காலம் வாழ்ந்து திராவிட மாடல் ஆட்சி தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் செயல்படுத்தி முன்னோடியாக திகழ வேண்டும் எனவும் அனைவரும் வாழ்த்துவோம் என தெரிவித்தார்.


தமிழக அரசு திட்டங்களில் பெண்களின் முன்னேற்றத்திற்கு அதிக அளவில் வாய்ப்புகளை அளித்து உள்ளாட்சி மன்றங்களிலும் மாநகராட்சியிலும் அதிக அளவில் 50 சதவீதத்தை தாண்டியும் வாய்ப்புகள் அளித்து இன்று தனித்துவமான நிர்வாகத் திறனை வளர்த்துக் கொண்டு வரும் பெண்களுக்கு பெரும் வாய்ப்பாக இந்த ஆட்சி உள்ளது.

மேலும் பெண் கல்வியை ஊக்குவிக்க புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி இன்று தன்னிகரற்ற கல்வி சேவை மாணவிகள் பெற்று வருகின்றனர். விரைவில் மகளிருக்கான உரிமை தொகை வழங்க உள்ளது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வரும் முதல்வர் விரைவில் அதனை அளித்து பெண்களின் முக்கியத்துவத்தை உணர்த்துவார்.

புராண காலத்திலேயே ஞானப்பழம் கிடைக்காமல் போனதால், முருகர் தனது சுயமரியாதையை இழக்க விரும்பாமல் தனது தந்தையிடம் கோபித்துக் கொண்டு பழனிக்கு சென்ற கதை அனைவருக்கும் தெரியும். தற்போது அனைவரும் தமிழகம் சுயமரியாதையுடன் உள்ளது திமுகவை ஆட்சியால் தான் என்பது அனைவரும் உணர்ந்திருப்பீர்கள் என தெரிவித்தார்.

இந்த பொதுக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் சன்பிராண்ட் ஆறுமுகம் , தலைமை பொதுக்குழு உறுப்பினர் எஸ்.கே.பி. சீனிவாசன் , சிகாமணி, பகுதி கழகச் செயலாளர் திலகர், சந்துரு வெங்கடேசன், மாமன்ற உறுப்பினர்கள் சுரேஷ், அஸ்மாபேகம், சித்ராராமச்சந்திரன், தேவராஜ் கமலக்கண்ணன், குமரன் மற்றும் திமுக மாநகர நிர்வாகிகள் மற்றும் திமுக தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்

Updated On: 15 March 2023 3:00 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...