/* */

உத்திரமேரூர் ஒன்றிய பகுதிகளில் காஞ்சிபுரம் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

உத்திரமேரூர் ஒன்றிய பகுதிகளில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செல்வம் தீவிரமாக வாக்கு சேகரித்தார்.

HIGHLIGHTS

உத்திரமேரூர் ஒன்றிய பகுதிகளில் காஞ்சிபுரம் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
X

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.  

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் விவசாயிகளிடம் குறைகளை மற்றும் தேவைகளை கேட்டு அறிந்து வாக்குகள் சேகரித்து வருகிறார்.

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செல்வம் உத்திரமேரூர் ஒன்றிய பகுதிகளில் இன்று காலை 8 மணி முதல் பல்வேறு கிராம ஊராட்சிகளில் திறந்த வெளி வாகனத்தில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் , ஒன்றிய செயலாளர் ஞானசேகர் , பேரூராட்சி தலைவர் சசிகுமார் உடன் இணைந்து வாக்குகள் சேகரித்து வருகிறார்.

பல்வேறு கிராமங்களில் மேற்கொள்ளப்பட்ட சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து மக்களுக்கு எடுத்துரைத்து இனி மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் வாக்குறுதிகள் அளித்து வாக்குகள் சேகரித்து வருகிறார்.

பரப்புரையில் பேசிய உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் , இந்திய இறையாண்மை காக்க இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் , விவசாயிகள் நலன் காக்க உத்தரமேரூர் சட்டமன்ற தொகுதியில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு விவசாயிகள் கூடுதல் வருவாய் பெற்றனர்.

இது போன்ற பல திட்டங்களை 30 மாதங்களில் செய்த நிலையில் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றி பெற்றால் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் கூடுதலாக நீட்டிக்கப்படுவதோடு ஊதியமும் உயர்த்தப்படும் என உறுதி அளித்தார்.

உத்திரமேரூர் ஒன்றியத்தில் 20க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளில் வாக்குகள் சேகரிக்கப்பட்டது.

Updated On: 2 April 2024 11:41 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  5. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  6. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  7. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  8. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  10. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு