/* */

காஞ்சிபுரம் : திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் உரிமைக்குரல் முழக்க ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரத்தில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பரில் உரிமைக்குரல் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் : திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் உரிமைக்குரல் முழக்க ஆர்ப்பாட்டம்
X

காஞ்சிபுரத்தில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விடியல் தரப்போவதக தேர்தல் வாக்குறுதி அளித்து அதை நிறைவேற்றாத மக்கள் விரோத திமுக அரசை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்டம் முழுவதும் உரிமைக்குரல் முழக்க போராட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் தலைமை தாங்கினார். இதில் அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், நிர்வாகிகள் மைதிலி, காஞ்சி பன்னீர்செல்வம், கே.யூ.எஸ்.சோமசுந்தரம், வள்ளிநாயகம் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கொரோனா பெருந்தொற்று காரணமாக சமூக இடைவெளியை பின்பற்றி கோஷங்கள் இட்டு போராட்டம் நடத்தினர்.

இதேபோன்று காஞ்சிபுரம் நகராட்சிகுட்பட்ட 51 வார்டுகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் ஒவ்வொரு பகுதியிலும் 50 பேர் கலந்து கொண்டு போராட்டம் நடத்தினர். காஞ்சிபுரம் ஒன்றிய பகுதிகளில் ஒன்றிய செயலாளர்கள் தும்பவனம் ஜீவானந்தம், களகாட்டூர் ராஜூ தலைமையில் கோஷங்கள் இட்டனர்.

மாவட்டத்தில் குன்றத்தூரில் முன்னாள் எம்எல்ஏ மதனந்தபுரம் பழனி தலைமையிலும், ஸ்ரீபெரும்புதூரில் போந்தூர் செந்தில்ராஜன் தலைமையில், உத்திரமேரூர் பஸ் நிலையம் அருகே ஒன்றிய செயலாளர்கள் கே.ஆர்.தர்மன், பிரகாஷ்பாபு, தங்கபஞ்சாட்சரம் தலைமையிலும் இதேபோன்று மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராமங்கள் தோறும் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழக மக்களுக்கு விடியல் தரப் போவதாக தேர்தல் வாக்குறுதி அளித்து வெற்றி பெற்று, ஆனால் மக்களுக்கு எந்தவித சலுகைகளையும் நிறைவேற்றாத மக்கள் விரோத திமுக அரசை கண்டித்து கண்டன முழக்கங்கள் இட்டனர்.

Updated On: 28 July 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்