/* */

காஞ்சி எவ்ரிடே கால்பந்தாட்ட குழுவினரின் கால்பந்து போட்டி துவக்கம்

காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் இன்று ஒரு நாள் நடைபெறும் இட் போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்ட குழுக்கள் கலந்து கொள்கிறது.

HIGHLIGHTS

காஞ்சி எவ்ரிடே கால்பந்தாட்ட குழுவினரின் கால்பந்து போட்டி துவக்கம்
X

காஞ்சிபுரம் எவ்ரி டே கால்பந்தாட்ட குழு சார்பில் ஒரு நாள் கால்பந்து போட்டி காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

உலக அளவில் அதிக ரசிகர்களைக் கொண்ட விளையாட்டுப் போட்டி என்றால் அது கால்பந்து விளையாட்டு ஆகும். இப் போட்டிகளை காண பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் கூடி தங்கள் ஆதரவு அணிகளை உற்சாகப்படுத்தி அதில் வெற்றி பெற்ற பின் மகிழ்ந்து கொண்டாடுவது வழக்கம்.

இது சில சமயங்களில் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டு போட்டி மைதானமே கலவரம் பூமியாகும் அளவிற்கு சம்பவங்களும் நடைபெற்று உள்ளது.

தற்போது உலக கால்பந்து போட்டி FIFA 2022 போட்டி கத்தார் பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில் 30-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகிறது.

அணிகளான பிரேசில் அர்ஜென்டினா இத்தாலி உள்ளிட்ட நாடுகள் பலமுறை கோப்பைகளை வென்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்தியாவில் கால்பந்து மீது ஆர்வம் கொண்டது காரணமாக பிரிமியர் கால்பந்து போட்டிகளும் நடைபெற்று இளைஞர்களை விளையாட்டின் மீது ஆர்வம் கொள்ளும் வகையில் நடைபெற்று வருகிறது.

அவ்வகையில் உலக கால்பந்து போட்டி நடைபெற்று வரும் நிலையில் காஞ்சிபுரம் எவ்ரி டே கால்பந்தாட்ட குழு காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் ஒரு நாள் ஓபன் கால்பந்து போட்டி நடைபெறும் என அறிவித்து அதற்கான விண்ணப்பங்கள் வழங்கி மற்றும் வரைமுறைகளை அறிவித்தது.

இன்று காலை எட்டு மணி அளவில் போட்டிகளை அக்குழுவின் தலைவர் சைமன் , செயலாளர் ரித்தீஷ் , பொருளாளர் அன்பு ஆகியோர் துவக்கி துவக்கி வைத்தனர்.

இப் போட்டியில் நெய்வேலி விழுப்புரம் திருவள்ளூர் சென்னை வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள 20க்கும் மேற்பட்ட கால்பந்து விளையாட்டு வீரர்கள் குழுவினர் கலந்து கொள்கிறனர்.

இப் போட்டியில் ஒரு குழுவில் குறைந்தபட்சம் ஏழு பேர் கலந்து கொள்ள வேண்டும். 15 நிமிடங்கள் என இருமுறையும் கூடுதல் அவகாசம் தேவை எனில் ஐந்து நிமிடங்களும் வழங்கப்பட்டு போட்டியில் அதிக கோல்கள் அடிக்கப்படும் தேர்வு அணி தேர்வு செய்யப்படும். இப்போட்டிக்கென இரண்டு மைதானங்கள் தயார் செய்யப்பட்டு போட்டிகள் நடைபெறுகிறது.

இப் போட்டியில் வெற்றி பெறும் முதல் பரிசாக ரூபாய் 15,000 , இரண்டாம் இடம் பிடிக்கும் விளையாட்டு குழுவுக்கு 10,000 , மூன்றாம் இடம் பிடிக்கும் குழுவிற்கு ரூபாய் 7000 மற்றும் நான்காவது இடத்தை பிடிக்கும் குழுவிற்கு 5000 என பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

இப்போ போட்டியில் சிறந்த கால்பந்து விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட உள்ளது.

கலந்து கொண்ட அனைத்து வீரர்களுக்கும் உணவு, குளிர்பானம் மற்றும் ஊட்டச்சத்து உணவுகள் இக்குழு சார்பில் வழங்கப்பட உள்ளது.

இன்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் மாவட்ட விளையாட்டு அரங்கிற்கு அதிக அளவில் பல்வேறு விளையாட்டுகளுக்கு வந்திருந்த வீரர்கள் கால்பந்தாட்ட போட்டியை காண வந்திருந்து வீரர்களை உற்சாகப்படுத்தி போட்டியை கண்டு ரசித்தனர்.

Updated On: 27 Nov 2022 5:15 AM GMT

Related News