/* */

நீல வண்ண பட்டாடையில் ரோஜா மலர் அலங்காரத்தில் பட்டாசுகள் வெடிக்க காமாட்சி அம்பாள் வீதியுலா

தீபாவளி திருநாளை ஒட்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகங்களுக்கு பின் மூலவர் குங்கும நிற மாலை அணிந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

HIGHLIGHTS

நீல வண்ண பட்டாடையில் ரோஜா மலர் அலங்காரத்தில் பட்டாசுகள்  வெடிக்க காமாட்சி அம்பாள் வீதியுலா
X

தீபாவளி திருநாளை ஒட்டி நீல வண்ண பட்டாடை உடுத்தி காஞ்சி காமாட்சி அம்மன்,  லட்சுமி,  சரஸ்வதி தேவியுடன் ராஜ வீதியில் உலா வந்தார்

இன்று உலகம் முழுவதும், தீபாவளி பண்டிகையை, அதிகாலை எழுந்து நீராடி , புத்தாடை அணிந்து குடும்பத்தினருடன் கோலாகலமாக பட்டாசுகள் வெடித்து தீப ஒளி திருவிழாவை கொண்டாடி வருகின்றனர்.

கடந்த ஒரு வார காலமாக தீபாவளி பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் திட்டமிட்டு தங்கள் சொந்த ஊர்களில் பண்டிகையை குடும்பத்தினரும் கொண்டாட ரயில் மற்றும் பேருந்துகளில் பயணித்தனர். சென்னையில் வசித்த மக்கள், பிற மாவட்டங்களுக்கு பயணித்தனர். இதனால் தேசிய நெடுஞ்சாலைகள் அனைத்தும் திக்கு முக்காடியது. எந்தவித தடங்கலின்றி அனைவரும் பாதுகாப்பாக அவரவர் இல்லங்களுக்கு சென்று, உறவினருடன் மகிழ்ந்து தங்களது உறவினை புதுப்பித்துக் கொண்டனர்.

பொதுமக்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய போக்குவரத்து துறையும், அவர்களுக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாமல் இருக்க காவல்துறையும் பெரிதும் ஒத்துழைத்தது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை முதலே பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்து வருகின்றனர். இது மட்டும் இல்லாமல் தீபாவளி சிறப்பு பண்டிகை நாளை ஒட்டி வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் வாங்கி அதிலும் மகிழ்ந்து வருகின்றனர்.

கோவில் நகரமாக காஞ்சிபுரத்தில் அதிகாலை சிறப்பு அபிஷேகத்துக்கு பின் அனைத்து திருக்கோயில்களும் சிறப்பு மலர் அலங்காரத்துடன் சுவாமி தரிசனத்திற்கு திறக்கப்பட்டது.

சக்தி பீடங்களில் ஒன்றான ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்பாள் திருக்கோயில் காஞ்சிபுரத்தின் மையப்பகுதியில் அமைத்துள்ள புகழ்பெற்ற கோயில் ஆகும். காமாட்சி அம்பாள் இங்கே நான்கு கரங்களோடு பத்மாசன யோக நிலையில் அமர்ந்திருக்கிறாள். முன் இருகைகளில் கரும்பு வில்லினையும், மலர்க் கனைகளையும், மேல் இருகைகளில் பாசம் மற்றும் அங்குசத்தை ஏந்தி இருக்கிறாள்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன், தீபாவளி பண்டிகையையொட்டி, இன்று அதிகாலை 5 மணி அளவில் நடை திறக்கப்பட்டு கோபூஜைக்கு பிறகு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மூலவர் காமாட்சி அம்மன் அரக்கு நிற பட்டாடை உடுத்தி, குங்கும நிற மாலை மற்றும் மனோரஞ்சிதம் உள்ளிட்ட பல்வேறு வண்ணமலர் அலங்காரத்தில், ரம்மியமாக பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

மேலும் மூலவர் சன்னதிக்கு அருகில் அமைந்துள்ள, ஸ்ரீ அன்னபூரணி அம்மாள் தங்க கவசம் அணிந்து தீபாவளி பட்சணங்கள் அவருக்கு படையல் வைக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் மட்டுமில்லாது, பிற மாவட்டங்களில் இருந்து தீபாவளி பண்டிகை என்று காஞ்சிபுரம் திருக்கோயில் தரிசிக்க வந்த ஏராளமான வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட பக்தர்கள் காஞ்சி காமாட்சி அம்மனை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் மேற்கொண்டனர்

இதைத் தொடா்ந்து, உற்சவா் காமாட்சி நீல நிற பட்டு உடுத்தி, ரோஜா , மனோரஞ்சித மாலைகள் மற்றும் திருவாபரணங்கள் அணிந்து லட்சுமி சரஸ்வதி தேவியுடன் கோவில் நுழைவு வாயிலுக்கு எழுந்தருளினாா். அங்கு கோவில் நிா்வாகத்தின் சாா்பில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. பின்னா், நான்கு ராஜ வீதிகளிலும் ஸ்ரீலட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தீபாவளியை ஒட்டி திரளான பக்தா்கள், சுவாமி தரிசனம் செய்தனா்.

Updated On: 24 Oct 2022 3:30 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  2. வால்பாறை
    வால்பாறை சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    நண்பா..மனைவியை லவ் பண்ணுடா..! திருமண வாழ்த்து..!
  4. இந்தியா
    பெங்களூரு செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சியில் அவசர...
  5. வானிலை
    வடமேற்கு இந்தியாவில் வெப்ப அலை எச்சரிக்கை, வெப்பநிலை 40 டிகிரிக்கு...
  6. வீடியோ
    DMK ஆட்சி, Kamarajar ஆட்சி Seeman சொன்ன பதில் !#seeman #seemanism #ntk...
  7. வீடியோ
    Kamarajar-ரிடம் படம் எடுக்க சொன்ன இயக்குநர் Sundaram ?#seeman...
  8. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  9. சினிமா
    இந்தியன் 2 படத்தில் இந்தியன் 3 அப்டேட்.. சூப்பர் சர்ப்ரைஸ்!
  10. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...