/* */

தேர்தல் பணி விலக்கு நடைமுறைகளை பின்பற்ற ஜக்டோ ஜியோ சங்கம் கோரிக்கை

ஊரக உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றும் ஆசிரியர்கள் பணி விலக்கு நடைமுறைகளை பின்பற்ற ஜாக்டோ ஜியோ ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

HIGHLIGHTS

தேர்தல் பணி விலக்கு நடைமுறைகளை பின்பற்ற ஜக்டோ ஜியோ சங்கம் கோரிக்கை
X

தேர்தலில் பணியாற்றும் அலுவலருக்கான தேர்தல் ஆணையம் அறிவித்த நடைமுறைகளை பின்பற்ற கோரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்த ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்புக் குழுவினர்.

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த உள்ளாட்சித் தேர்தல் பணிகளை அரசு ஊழியர்கள் மற்றும் வாக்குப்பதிவின் போது ஆசிரியர்கள் என இரு தரப்பினரும் பணியாற்ற உள்ளனர்.

இந்நிலையில் தேர்தல் ஆணையம் ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், புற்றுநோய் பாதிக்கப்பட்டோர் உடல்நலமில்லாமல் மருத்துவ விடுப்பில் உள்ளோர் அனைவருக்கம் இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்புக் குழு சார்பில் சேகர் தலைமையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

இதில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட நடைமுறைகளை பின்பற்றாமல் தேர்தல் பணிக்கான ஆணை காஞ்சிபுரம் மாவட்டத்தில் வழங்கியுள்ளதாகவும் இதனை கருத்தில் கொண்ட முறையான நபர்களுக்கு தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்குமாறும் கேட்டு கொண்டுள்ளனர்.

மேலும் குறிப்பாக பள்ளி ஆசிரியர்கள் வயது மூப்பு மற்றும் இணை நோய் மற்றும் கொரோனா பாதிப்பில் சிகிச்சை பெற்று வந்துள்ள நபர்களுக்கு தேர்தல் பணியில் இருந்து உடனடியாக விலக்கு அளிக்க வேண்டும் எனவும் தேர்தலில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அடிப்படை வசதிகளான கழிப்பறை குடிநீர் உணவு உள்ளிட்டவைகளை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டுமெனவும் இம்மனுவில் கோரிக்கையாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Updated On: 30 Sep 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  2. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  4. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  5. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  6. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  7. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  8. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  9. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!