/* */

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 272 பள்ளி வாகனங்கள் ஆய்வு: வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி அதிரடி

காஞ்சிபுரம் மாவட்டத்தில், வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி தலைமையில் ஐவர் குழுவினர், 272 வாகனங்களை அதிரடியாக ஆய்வு செய்தனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 272 பள்ளி வாகனங்கள் ஆய்வு: வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி அதிரடி
X

காஞ்சிபுரத்தில் பள்ளி வாகனங்களை அதிரடியாக ஆய்வு செய்யும் வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தினகரன்.

.தமிழகத்தில் கடந்த 13ஆம் தேதி அனைத்து பள்ளி வகுப்புகள் துவங்கி நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 46 பள்ளிகளில் இயக்கப்படும் வாகனங்களை ஆண்டு தோறும் மாவட்ட போக்குவரத்து அலுவலர், வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்வது வழக்கம்.

இந்த ஆய்வில், பள்ளி வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுகின்றனவா? பாதுகாப்பு உபகரணங்கள், தீயணைப்பு கருவிகள், அவசர வழி, வாகன ஓட்டுநர் உரிமம் ஆகியவை சரியாக உள்ளதா? என ஆய்வு செய்து பள்ளி போக்குவரத்து வாகனத்திற்கு சான்றிதழ் அளிப்பார்கள்.

அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் 46 பள்ளிகளில் இயங்கி வரும் 272 வாகனங்களை தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி ஆய்வு செய்தார். அவருக்கு ஆய்வு விதிமுறைகளை போக்குவரத்து அலுவலர் தினகரன் விளக்கி ஆய்வு மேற்கொண்டார். 5 பேர் கொண்ட குழுவினர் பள்ளி வாகனங்களை முறையாக ஆய்வு செய்து வாகன தணிக்கை சான்றிதழ் அளித்தனர்.

ஆய்வுக் குழுவில் வருவாய்த்துறை , பள்ளிக்கல்வித்துறை, வட்டார போக்குவரத்து அலுவலகம் அலுவலர்கள் , காவல்துறை உள்ளிட்ட உறுப்பினர்கள் இடம்பெற்று இருந்தனர்.

Updated On: 18 Jun 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்