/* */

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காணாமல்போனவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த ஒரு வாரத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏழு பெண்கள் மூன்று ஆண்கள் மாயமானதாக பல்வேறு காவல் நிலையங்கள் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காணாமல்போனவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
X

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்.  ( கோப்பு படம்)

விஞ்ஞான வளர்ச்சிகள் அதிகரித்துள்ள நிலையில் அதன் பயன்கள் ஓரு புறம் இருக்க , அதனால் ஏற்படும் தீமைகளும் சரிசமமாக உள்ளது. சமீப காலமாகவே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களால் குடும்ப சச்சரவுகளும் குற்ற நிகழ்வுகளும் அதிகரித்து வருவதாக பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இது மட்டும் இல்லாமல் அதில் வரும் வசனங்களும் இக்கால குழந்தைகளுக்கு பெருத்த ஆபத்தை விளைவிப்பதாகவும் இதனை தொடர்ந்து ஒளிபரப்பு ப்பு மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி வருகின்றனர்.

இந்நிலையில் இன்றைய இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பருவ மாற்ற காலங்களில் கவனமாக இருக்க வேண்டும் எனவும் , கல்வி வேலை வாய்ப்பு பெறுவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் , தீய பழக்கங்கள் மற்றும் இளம் பருவ காதலில் ஈடுபட வேண்டாம் எனவும் பலர் அறிவுறுத்தி வருகின்றனர்.

இது போன்ற அறிவுரைகளை ஏற்க தற்போதைய பெண்கள் மற்றும் மாணவர்கள் இதை கடினமாக ஏற்றுக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுவது வழக்கமாக உள்ளது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் காணாமல் போய் உள்ளதாக அவரது பெற்றோர்கள் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் மனு அளித்துள்ளதாக காவல்துறை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் குறிப்பாக 6 பெண்கள் இருபத்தைந்து வயதுக்கு கீழ் என்பதும், மாணவர்கள் மூன்று நபர்களும் 25 வயதுக்கு கீழ் என்பதும் அதிர்ச்சியை அளிக்கிறது.

காணாமல்போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இதுகுறித்து மிகுந்த கவலை அடைந்துள்ளதும், தவறான பாதைகளில் சென்றுள்ளனர் என்றும் அச்சத்துடனே நாட்களை கழித்து வருகின்றனர்.

Updated On: 30 Jan 2024 12:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...