/* */

காஞ்சிபுரம் அருகே ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்

காஞ்சிபுரம் அருகே வையாவூர் ஏரியில் மீன்கள் செத்து மிதப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. இதனை அரசு உடனே சுத்தப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் நகரினை ஓட்டி அமைந்துள்ளது வையாவூர் கிராமம். புறநகர் வளர்ச்சியில் பெரிதும் பொதுமக்களை கவரும் பகுதியாக இக்கிராமம் உள்ளது.இங்குதான் கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பெரும் குடிநீர் ஆதாரமாக விளங்குவது வையாவூர் ஏரியாகும்.

இந்நிலையில் கடந்த இரு தினங்களாக ஏரியின் நீர்மட்டம் குறைவதாலும், கடும் கோடை காரணமாக ஏரியில் வளர்ந்து வரும் மீன்கள் செத்து மிதந்து கரையோரம் குவிந்துள்ளது.

இறந்து கிடக்கும் மீன்களை காகம், கொக்கு உள்ளிட்டவைகள் எடுத்து சென்று கிராம பகுதியில் போட்டுவிட்டு செல்வதாலும் கரையோரங்களில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து உள்ளதால் காற்று திசை மாறுபாடு காரணமாக 24 மணி நேரமும் துர்நாற்றம் அதிக அளவில் வீசுவதால் குடியிருப்புவாசிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்..

மேலும் இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் என்ற அச்சம் அப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது மேலும் குடிநீர் ஆதாரததிற்கும் பாதிப்பு எழுமோ என்ற அச்சம் அப்பகுதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Updated On: 16 May 2021 2:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  2. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  3. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  4. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  5. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  6. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  7. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  8. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  9. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!
  10. சினிமா
    யாரிந்த ஷாலின் ஸோயா..?