/* */

வரதராஜ பெருமாள் கோவில் உண்டியல் எண்ணும் பணி துவக்கம்

108 திவ்ய தேசங்களில் ஒன்றான வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த 13 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

வரதராஜ பெருமாள் கோவில் உண்டியல் எண்ணும் பணி துவக்கம்
X

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் உண்டியல் எண்ணும் பணிகளை ஆய்வு மேற்கொள்ளும் செயல் அலுவலர்கள் 

காஞ்சிபுரம் புகழ்பெற்ற அத்திவரதர் ஆலயம் என அழைக்கப்படும் வரதராஜ பெருமாள் திருக்கோயில் உண்டியல் எண்ணும் பணி துவங்கி உள்ளது.

கோயில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் பல்வேறு திவ்ய தேச தலங்களும், பரிகார தலங்களும் அமைந்துள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தமிழகம் மட்டுமில்லாது பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வந்து சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.

அவ்வகையில் புகழ்பெற்ற அத்தி வரத திருக்கோயில் என அழைக்கப்படும் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் வகையில் திருக்கோயில் வளாகத்தில் 10 உண்டிகளும், வெளி பிரகாரத்தில் மூன்று உண்டிகளும் என 13 உண்டிகள் வைக்கப்பட்டுள்ளது.

வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியதை எண்ணும் தனியார் ஆன்மீக குழு‌ ஊழியர்கள்.

மூன்று மாதங்களுக்கு பிறகு இன்று காலை 10 மணி அளவில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி அறிவுரை பேரில், உதவி ஆணையர் லட்சுமி காந்தன் பாரதி வழிகாட்டுதல் பேரில் கோயில் செயல் அலுவலர் சீனிவாசன் , சுரேஷ் ஆய்வாளர் பூங்கொடி முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு , 50க்கும் மேற்பட்ட பக்தர்களை கொண்டு எண்ணப்பட்டு வருகிறது.

கடந்த ஜூன் மாதம் எண்ணபட்ட நிலையில் அப்போது பக்தர்கள் காணிக்கையாக 29 லட்சம் செலுத்தி இருந்ததனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உண்டியல் என்னும் பணியில் ஈடுபட்ட உள்ள ஊழியர்களுக்கு தேவையான குடிநீர் உணவு உள்ளிட்டவைகளை திருக்கோயில் ஊழியர்கள் அவ்வப்போது அளித்து வருகின்றனர்

மேலும் உண்டியல் என்னும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் மற்றும் என்னும் காட்சிகளை பதிவு செய்ய வீடியோ கேமரா அமைக்கப்பட்டுள்ளது.

Updated On: 21 Sep 2023 7:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  2. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  3. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  5. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  6. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  7. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  8. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  9. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    50 சிறந்த மகளிர் தின வாழ்த்துச் செய்திகள்!