/* */

பரந்தூரில் 65 இருளர்களுக்கு வீட்டுமனை பட்டா : எம்.எல்.ஏ, எம்.பி வழங்கல்

சிங்காடிவாக்கம் , கரூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 65 பழங்குடியின மக்களுக்கு எம்.எல்.ஏ., எம்.பி வீட்டுமனைப்பட்டா வழங்கினர்.

HIGHLIGHTS

பரந்தூரில் 65 இருளர்களுக்கு வீட்டுமனை பட்டா : எம்.எல்.ஏ, எம்.பி வழங்கல்
X

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் குறுவட்டத்தில் இருளர் இன மக்களுக்கு வீட்டுமனை பட்டாவை எம்எல்ஏ, ஏம்பி ஆகியோர் வழங்கினர்.

காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பரந்தூர் குறுவட்டத்தில் அமைந்துள்ள சிட்டியம்பாக்கம் , கரூர், வையாவூர் உள்ளிட்ட 6 கிராமங்களில் நீர்நிலைகளில் வசிக்கும் இருளர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நெடுநாள் கோரிக்கை இருந்து வந்தது.

இந்நிலையில் இன்று காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் ராஜலட்சுமி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் காஞ்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம் மற்றும் காஞ்சி சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் கலந்துகொண்டு 65 நபர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கினர்.

விழாவில் பேசிய எம்.எல்.ஏ.,எம்.பி ஆகியோர் தற்போது முதல்வரின் உத்தரவின் படி இருளர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர்களுக்கு தேவையான சான்றிதழ்கள் வீட்டுமனை பட்டா முதியோர் ஓய்வூதிய திட்டம் உள்ளிட்டவைகளை கணக்கெடுப்பு நடத்தி கிடைக்கப்பெறாத அவர்களுக்கு உடனடியாக வழங்க அரசு அலுவலர்கள் தயாராக உள்ளதாகவும்,

இதனை இம்மக்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டு தங்களது அடுத்த தலைமுறையினருக்கு கல்வி வேலைவாய்ப்பு இருப்பிடம் ஆகியவற்றை உறுதி செய்ய ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் லட்சுமி , ஒன்றியக்குழு தலைவர் மலர்கொடிகுமார் , நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் பி எம் குமார், ஒன்றியக்குழு உறுப்பினர் தேவேந்திரன், பிரசாத் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 13 Nov 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்