/* */

எவ்வித இடர்பாடுகளிலும் உயர்கல்வி தடை பட கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும்

காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளில் இருந்து இடைநின்ற மாணவர்களுக்கு உயர்கல்வி வேலை வாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது

HIGHLIGHTS

எவ்வித இடர்பாடுகளிலும் உயர்கல்வி தடை பட கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும்
X

காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் இடைநின்ற மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த போது.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பள்ளி செல்லா மாணவர்களின் கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளையும் வழிகாட்டுதலையும் மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை சார்பில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள நல்லுறவு மைய அரங்கில் முதன்மைக் கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி முன்னிலையில் , மாவட்ட ஆட்சியர் மா ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலர் முனைவர் சுப்ரமணியன் ஐஏஎஸ் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வி அவசியம் என்பதை இந்த அரசு அனைவருக்கும் உணர்த்தி வருவதாகவும், கல்வி தடைக்கான காரணம் அறிந்து அதற்கான தீர்வை பல அரசு துறைகள் ஒருங்கிணைந்து வழிகாட்டி வருகிறது இதனை பயன்படுத்தி மாணவர்கள் உயர்கல்வி தடையை நீக்க வேண்டும் என பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி பேசுகையில் , மாணவர்களின் கல்வித்தடை எவ்வித இடர்பாடுகள் இருந்தாலும் அதனை புறம் தள்ளிவிட்டு கல்வி கற்று வாழ்வில் வளம் பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.தமிழக பள்ளிக்கல்வித்துறை மாணவர்களின் கற்றல் திறனை வளர்க்கவும் உயர் கல்வி வரை இடை நிற்றலை தவிர்க்கவும் பல்வேறு விதமான திட்டங்களை வகுத்து அதனை தற்போது வரை செயல்படுத்தி வருகிறது.

துவக்கப்பள்ளி நடுநிலைப்பள்ளி உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் கல்வி பயிலும் மாணவ , மாணவிகளின் கல்வி இடை நிற்றலை கண்டறிய பள்ளிகள் தோறும் செயல்படும் கல்வி மேலாண்மை குழுவை பயன்படுத்தி கிராமத்தில் உள்ள பள்ளி செல்லா மாணவர்களின் கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளையும் வழிகாட்டுதலையும் மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை சார்பில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதுபோன்று வழிகாட்டுதல் நிகழ்ச்சியை நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பள்ளி கல்வித்துறை செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உயர்கல்வி செல்லாது பள்ளியறிந்து படிப்பை நிறைவு செய்த மாணவிகளை பள்ளி கல்வி மேலாண்மை குழு மூலம் சுமார் 188 பேர் கண்டறியப்பட்டனர். இதில் 70 மாணவ மாணவிகள் மீண்டும் ஒரு கல்வி கற்க சென்று விட்ட நிலையில் மீதமுள்ள மாணவ மாணவிகளுக்கான உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அரசு கலைக் கல்லூரி முதல்வர்கள் தங்கள் கல்லூரியில் உள்ள காலி மாணவ சேர்க்கை இடங்கள் மற்றும் பாடப்பிரிவுகள் , மாணவர்கள் எவ்வாறு கல்விக்கடன் பெறுவது குறித்து ஆலோசனைகள் வழங்கிய வங்கி மேலாளர்கள், குறுகிய கால பட்டய பயிற்சிகளுடன் வேலைவாய்ப்பு குறித்து திறன் மேம்பாட்டு வளர்ச்சி துறை அலுவலர்கள், வேலை வாய்ப்புத் துறை அலுவலர்கள் என பலர் மாணவர்களிடம் தங்கள் துறையில் உள்ள பலன்களை எடுத்துரைத்தனர்.

இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோர்களுடன் கலந்து கொண்டு தங்கள் கல்வி தொடர தேவையான ஆலோசனைகளைப் பெற்று மீண்டும் உயர்கல்வி கற்க தேவையான வழிகாட்டுதலை பெற்றனர்.


Updated On: 20 Oct 2022 7:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  2. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
  3. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  6. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  7. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  9. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  10. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே: சிறந்த 50 தமிழ் மேற்கோள்கள்!