/* */

காஞ்சிபுரத்தில் முன்னாள் ஊராட்சி தலைவரின் உயிரை பறித்த அரசுப் பேருந்து.. பரபரப்பு சிசிடிவி காட்சிகள்...

காஞ்சிபுரத்தில் விதிமுறைகளை மீறி சென்ற அரசுப் பேருந்து மோதியதில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பலியான சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் முன்னாள் ஊராட்சி தலைவரின் உயிரை பறித்த அரசுப் பேருந்து.. பரபரப்பு சிசிடிவி காட்சிகள்...
X

இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதிய சிசிடிவி காட்சி.

பட்டு நகரம் மற்றும் கோயில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்துக்கு வெளி மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் பல்லாயிரக் கணக்கானோர் வந்து செல்கின்றனர். மேலும், காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்கள் தொழில் நிமித்தமாக இருசக்கர வாகனம் மற்றும் பேருந்துகளில் வந்து செல்கின்றனர்.

இதனால், காஞ்சிபுரம் நகரில் காமராஜர் ரோடு, காந்தி ரோடு, ரயில்வே ரோடு, விளக்கடி கோயில் தெரு, ரங்கசாமி குளம் உள்ளிட்ட பகுதிகள் அவ்வப்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் பண்டிகை காலங்கள், முகூர்த்த நாட்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்களில் செல்வது கடினமான சூழலை ஏற்படுத்தி வருகிறது.

தொடர்ந்து நிலவி வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்க மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது. இதன் தொடர்ச்சியாக, காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி ஆகியோரின் ஆலோசனையின் பேரில் காஞ்சிபுரம் நகரில் போக்குவரத்து மாற்றங்களை காவல் துறையினர் மேற்கொண்டனர்.

குறிப்பாக, காஞ்சிபுரம் நகரில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, வந்தவாசி, உத்திரமேரூர் செல்லும் பேருந்துகள் ரயில்வே ரோடு வழியாக செல்ல வேண்டும் என்றும், சென்னை செல்லும் பேருந்துகள் கட்சிப்பேஸ்வரர் கோயில், ஒலிமுகமது பேட்டை வழியாக சென்னை தேசிய நெடுஞ்சாலையை அடைந்து சென்னை செல்ல வேண்டும் என்றும் காவல் துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், காஞ்சிபுரம் அருகேயுள்ள ஐயங்கார்குளம் பகுதியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம் (65) தனது இரு சக்கர வாகனத்தில் காஞ்சிபுரம் நகரில் ‌பொருட்களை வாங்கி கொண்டு, காவலான்கேட் பகுதியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு காமராஜர் சாலை வழியாக தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது, வேலூரில் இருந்து காஞ்சிபுரம் பேருந்து நிலையம் வந்து, அங்கிருந்து தாம்பரம் நோக்கி சென்ற அரசுப் பேருந்து (தடம் எண்- 156) போக்குவரத்து விதிகளை மீறி மூங்கில் மண்டபம் வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது, முன்னால் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம் பேருந்தின் முன்சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி பரிதாபமாக பலியானார்.

இந்த விபத்து குறித்து விஷ்ணு காஞ்சி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பேருந்து ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்து பேருந்தை காவல் நிலையத்துக்கு கொண்டுச் சென்றனர். விபத்தில் சிக்கி உயிரிழந்த பன்னீர்செல்வத்தின் உடல் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரதேப் பரிசோதனைக்கா அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், விபத்து நிகழ்ந்த நேரத்தில் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் காஞ்சிபுரத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்தக் காட்சியில் முன்னால் சென்று கொண்டிருந்த பன்னீர்செல்வத்தின் மீது பேருந்து மோதுவது தெளிவாக பதிவாகி உள்ளது.

Updated On: 4 Nov 2022 5:01 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...