/* */

30 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை: காஞ்சிபுரம் கலெக்டர்

பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கரையோர முப்பது கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

HIGHLIGHTS

30 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை: காஞ்சிபுரம் கலெக்டர்
X

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையினை தொடர்ந்து, மாண்டஸ் புயல் மற்றும் தொடர்மழை காரணமாக பாலாறு ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதாலும், இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாலாறு அணைக்கட்டிலிருந்து இன்று (12.12.2022) பிற்பகல் 2.00 மணியளவில் வினாடிக்கு 1724 கன அடி உபரி நீர் பாலாற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.

மேலும், தொடர் மழையின் காரணமாக கூடுதலாக பாலாற்றில் தண்ணீர் வர வாய்ப்புள்ளது என பொதுப் பணித் துறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது

எனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தின் பாலாற்றின் இடது கரை மற்றும் வலது கரையினை ஒட்டி அமைந்துள்ள, காஞ்சிபுரம் வட்டம், வாலாஜாபாத் வட்டம் மற்றும் உத்திரமேரூர் வட்டத்தைச் சார்ந்த கீழ்க்கண்ட கிராமங்களைச் சார்ந்த கரையோர மக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ள அபாய எச்சரிக்கை அளிக்கப்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம்

இடது கரையோர கிராமங்கள்

1. பெரும்பாக்கம்

2. முத்தவேடு

3. பிச்சவாடி

4. விஷார்

5. ஆளவந்தார்மேடு

6. விப்பேடு

7. வெங்கடாபுரம்

8. செவிலிமேடு

9. ஓரிக்கை

10. சின்னகயப்பாக்கம்

11. கோயம்பாக்கம்

12. வில்லிவளம்

13. வெங்குடி

14. வாலாஜாபாத்

15. பழையசீவரம்

வலது கரையோர கிராமங்கள்

1. கோழிவாக்கம்

2. புஞ்சையரசன்தாங்கல்

3. வளத்தோட்டம்

4. குருவிமலை

5. விச்சந்தாங்கல்

6. ஆசூர்

7. அவலூர்

8. அங்கம்பாக்கம்

9. திருமுக்கூடல்

10. பினாயூர்

11. திருமஞ்சேரி

12. சாத்தனஞ்சேரி

13. கலியப்பேட்டை

14. ஒரக்காட்டுப்பேட்டை

15. காவித்தண்டலம்

மேலும், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வருவாய் துறை, காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறை பணியாளர்கள் மூலம் பாலாற்றின் கரையோரம் உள்ள கிராமங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது

எனவே, ஆற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக வெளியேறி பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். மேலும் பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்கவோ, ஆற்றைக் கடக்கவோ, ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ இரங்க வேண்டாம் எனவும் செல்போன் மூலம் புகைப்படம் எடுப்பது, செல்பி போன்றவற்றை செய்ய கூடாது எனவும், கால்நடைகளை பாலாற்றில் மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம் எனவும் வீட்டில் இருக்கும் சிறுவர் சிறுமிகளை ஆற்றில் அருகில் செல்லாமல் இருக்க விழிப்புடன் இருக்குமாறும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது

ஏற்கனவே இருமுறை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் தற்போது ராணிப்பேட்டை ஆற்றில் இருந்து நீர் வருவதால் மீண்டும் ஒரு முறை பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆகவே பொதுமக்கள் இது போன்ற சூழ்நிலையில் பொறுப்புடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Updated On: 12 Dec 2022 11:21 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...