/* */

காப்பீடு செய்ய இயலாது நிலை ஏற்பட்டுள்ளதாக இராமனுஜபுர விவசாயிகள் புகார்

விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் பயிரிடப்படும் பயிர்களுக்கு பயிர் காப்பீட்டு செய்து பேரிடர் காலங்களில் ஏற்படும் இழப்புகளை தவிர்க்க இது உதவுகிறது

HIGHLIGHTS

காப்பீடு செய்ய இயலாது நிலை ஏற்பட்டுள்ளதாக இராமனுஜபுர விவசாயிகள் புகார்
X

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விவசாய கூட்டம்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று விவசாயத்தில் நலன் காக்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இதில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ராமானுஜபுரம் பகுதி விவசாயிகள் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், திருப்பெரும்புதூர் வட்டம் , இராமானுஜபுரம் கிராமத்தில் நாங்கள் ஏரி நீர்பாசனத்தை ஆதாரமாகக் கொண்டு விவசாயம் செய்து வருகிறோம். நாங்கள் Paddy-l-ல் பாபட்லா நெல் வருடம் தோறும் சாகுபடி செய்து வருகிறோம். பாபட்லா நெல் மானாவாரி பயிர் அதாவது வானம் பார்த்த பூமி என்ற வகையில் இந்த நெல் வானத்தை நம்பி பயிர் செய்வதால் எங்களுக்கு ஆறு மாத காலம் சாகுபடி காலமாக தேவைப்படுகிறது.

எனவே, எங்கள் கிராம விவசாயிகள் நிலத்தை பண்படுத்தி ஆகஸ்டு 2-ம் தேதி பருவமழை பெய்ததால் நாங்கள் விதை விதைத்தோம். இதன் அறுவடை காலம் டிசம்பர் மாதத்தில் வருகின்றது.

எனேவ, எங்கள் கிராம நிர்வாக அலுவலர் விவசாயிகளுக்கு துரோகம் செய்யும் வகையில் பயிர் சாகுபடி 7-ஆம் மாதத்தில் நடந்ததாக வேளாண்மை அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ஜுவை மாதத்தில் பயிர் செய்ததாக அதன் அறுவடை காலம் டிசம்பர் மாதம் என்று குறிப்பிட்டுள்ளார்.

எனவே, நாங்கள் பருவமழை மற்றும் ஏரிபாசனத்தை நம்பி விவசாயம் செய்வதால் மத்திய அரசு அறிவித்த கால நிலையான ஆனால் ஆகஸ்டு முதல் வாரத்தில் முளைப்பு முளைத்தது என்று ஆகஸ்டு மாதத்தில் மழை பெய்ததால் நாங்கள் விதை விதைத்தோம். அறிக்கையால் எங்கள் விவசாயிகளை Paddy - II-ல் காப்பீடு செய்ய இயலாத என தெரிவித்துக் கொள்கிறோம்.மற்றும் விவசாயத்துறைக்கு VAO கொடுத்த நிலையில் அதிகாரிகள் புறக்கணிக்கிறார்கள்.

எனவே, தாங்கள் எங்கள் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நிலை நிறுத்தும் வகையில் எங்களுக்கு Paddy 2 -ல் காப்பீடு செய்ய ஆவன உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

Updated On: 30 Sep 2022 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  3. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  5. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  6. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  7. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  8. ஈரோடு
    ஈரோடு அரசு பல்நோக்கு மருத்துவமனையில் வெப்ப நோய் சிகிச்சைக்கு சிறப்பு...
  9. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  10. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...