/* */

கொள்முதலை கூடுதல் ஆக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் தேக்கத்தை தவிர்க்க கொள்முதல் அளவை கூடுதல் ஆக்க வேண்டும்.

HIGHLIGHTS

கொள்முதலை கூடுதல் ஆக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை.
X

பரந்தூர் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டை தேக்கத்தை தவிர்க்க கூடுதலாக கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஐந்து தாலுகாக்களில் சுமார் 1.5 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளது. இதில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் தற்போது மேல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

சாகுபடி செய்யப்பட்ட நெல் தற்போது அறுவடை காலம் முடிந்து நேரடி அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதற்காக விவசாயிகள் கடந்த இரு வார காலமாகவே காத்து இருக்கின்றனர்.

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதால் விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைப்பதால் அதனை பொதுமக்கள் அதனை விவசாயிகள் பெரிதும் வரவேற்கும் நிலையில் தற்போது 70 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில் 37 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் , 33 தேசிய நுகர்வோர் கழக கூட்டமைப்பு சார்பில் தற்போது இயங்கி வருகிறது.

கடந்த இரு வாரங்களாக கொள்முதல் நிலையங்களில், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் பெருமளவு தேங்கி கிடக்கிறது.

இது மட்டும் இல்லாது பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் நெல்களும் விற்பனை செய்ய கிடங்கு அருகே சாலையில் காத்து கிடக்கிறது.

குறிப்பாக பரந்தூர் சுங்குவார்சத்திரம் சாலையில் முழுவதும் ஒரு பக்கம் நெல் குவியல்களாகவே காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பும் விபத்துகளும் நடைபெறும் நிலையும் ஏற்படுகிறது.

ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களிலும் ஒரு குறிப்பிட்ட அளவே நாள் ஒன்றுக்கு என நிர்ணயம் செய்த நிலையை தற்போது அரசு காத்து கிடக்கும் நெல் குவியலை கணக்கில் கொண்டு நெல் கொள்முதலை கூடுதல் ஆக்க வேண்டும் எனவும், திடீரென கோடை மழை ஏற்பட்டால் , கடந்த மூன்று காலமாக விவசாயிகள் உழைப்பு அனைத்தும் வீணாகுவது மட்டுமல்லாமல் அரசு கொள்முதல் செய்த நெல்லும் பாதுகாப்பில்லாத நிலையில் கொள்முதல் நிலையங்கள் காணப்படுகிறது.

நுகர்வு பொருள் வாணிப கழகம் விரைந்து இதற்கான தீர்வை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகள் மட்டுமல்ல அது அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.

Updated On: 22 April 2024 9:01 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்