/* */

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் குடோன் அமைக்க விவசாயிகள் கோரிக்கை

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் மற்றும் கொள்முதல் நெல் மூட்டைகள் பாதுகாக்க குடோன் அமைக்க முன்னுரிமை அளிக்க வேண்டும்.

HIGHLIGHTS

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் குடோன் அமைக்க விவசாயிகள் கோரிக்கை
X

 களக்காட்டூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை லாரியில் ஏற்றப்படுகின்றன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு இறுதியில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக மாவட்டத்தில் 95 சதவீத நீர் நிலைகள் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியுற்று விவசாய பணிகளை துவக்கினர்.

மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் நெல் பயிரிடப்பட்டு கடந்த ஒரு மாதமாக அறுவடை செய்யப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் 50க்கும் மேற்பட்ட இடங்களில் அமைத்து ஆன்லைன் பதிவு மூலம் விவசாயம் நெல் கொள்முதல் செய்து வருகின்றனர்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல் மற்றும் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் எடுக்காமல் கோடை காலத்தை நம்பி செயல்பட்டு வருகின்றனர்.

இது குறித்து புகார் தெரிவித்தும் அதிகாரிகளும் மெத்தனமாகவே செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக 100 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வந்த நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென இடியுடன் கூடிய கனமழை மாவட்டத்தின் பல பகுதிகளில் பெய்தது.

இதனை சற்றும் எதிர்பாராத விவசாயிகள் நெல் கொள்முதல் நிலைய அலுவலர்கள் அதிர்ச்சியடைந்து சென்று பார்த்தபோது 10 சதவீத நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணானது.

கடந்த மூன்று நாட்களாகவே கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகள் எடுத்து செல்ல படாததால் இந்த நிலை ஏற்பட்டதாகவும், பல இடங்களில் கொள்முதல் செய்ய உரிய கோணிப்பை இல்லாததால் விவசாயிகள் நெல் தேக்கம் அடைந்து வீணாகியது.

மூன்று மாத கால உழைப்பு இது போன்ற கவனக்குறைவால் அரசும் விவசாயிகளும் நஷ்டமடையும் சூழ்நிலையை தவிர்க்க இனி வரும் காலங்களில் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 2 May 2022 4:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  3. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  4. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  5. லைஃப்ஸ்டைல்
    பட்ஜெட் போடுங்க... பணத்தை சேமிங்க!
  6. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  7. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிமையை தேட புத்த மொழிகள்!
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  10. ஈரோடு
    மாணவர் மீது தாக்குதல்: ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் மீது...