/* */

ஏரிகளில் நீர் இருப்பதால் வண்டல் மண் எடுக்க ஆர்வம் காட்டாத விவசாயிகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 211 ஏரிகளில் விவசாயிகள் உரிய அனுமதி பெற்று வண்டல் மண் எடுத்துக்கொள்ள அறிவிக்கப்பட்டிருந்தது

HIGHLIGHTS

ஏரிகளில் நீர் இருப்பதால் வண்டல் மண் எடுக்க ஆர்வம் காட்டாத விவசாயிகள்
X

நீர் நிறைந்து காணப்படும் தாமல் ஏரி .


காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் 380 ஏரிகளும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகளின் கீழ் 380 ஏரிகளும் குளங்களும் என மொத்தம் 2112 உள்ளன.

இந்த ஏரிகளில் கோடை காலத்தில் நீர் இருப்பு குறைவாக காணப்படும் போது விவசாயிகள் தங்களுக்கு தேவைப்படும் வண்டல் மண்களை எடுத்து நிலத்தினை மேம்படுத்திக் கொள்ளலாம் எனவும் அதற்கான வழிகாட்டு முறைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு முதலில் ஏரி மற்றும் ஆற்றுப் படுகையில் மண் எடுக்க காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் தடை விதி இருந்தது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் ஏரிகளில் வண்டல் மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டுமென தொடர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த வடகிழக்கு பருவமழை மற்றும் புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 95 சதவீத ஏரிகள் குளங்கள் நிரம்பி விவசாயப் பணிகள் நடைபெற்று தற்போது நபரை பருவ அறுவடை காலம் தொடங்கி உள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 202 பொதுப்பணித்துறை ஏரிகளிலும் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ஒன்பது ஏரிகளிலும் என மொத்தம் 211 ஏரிகளில் வண்டல் மண் எடுக்க கனிமவளத்துறையில் அனுமதி கூற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டிருந்தது.

மேலும் மண் எடுக்க பொக்லைன் ஜேசிபி போன்ற கனரக வாகனங்களை பயன்படுத்தக் கூடாது எனவும் மண்வெட்டி போன்ற பொருட்களைக் கொண்டு மண் எடுக்க வேண்டும் எனவும் இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி சான்று பெற்று அதனை சமைத்து அனுமதி பெற்றுக் கொள்ளலாம் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டது.

கோடைகாலத்தில் ஏரிகளில் நீர் வற்றிவிடும் என்ற நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தாலும் தற்போது பல்வேறு ஏரிகளில் நீர் இருப்பு 50 சதவீதத்திற்கு மேல் இருப்பதால் அடுத்த பருவத்திற்கும் விவசாயம் மேற்கொள்ள விவசாயிகள் தயார் நிலையில் உள்ளதாலும், இதுவரை கனிமவள அலுவலகத்தில் ஒரு சிலரே விண்ணப்பங்கள் பெற்று சென்றுள்ளதாகவும், பூர்த்தி செய்யபட்ட விண்ணப்பங்கள் இதுவரை பெறப்படவில்லை எனும் தெரிய வந்துள்ளது.

மணல் எடுக்கும் முறை குறித்து பொதுப்பணி அதிகாரி கூறுகையில், ஒரு அடி வரை ஏரியில் மண்ணெடுக்க பரிந்துரை செய்துள்ளதாகவும் அதற்கு கீழ் எடுக்க அனுமதி இல்லை என்பதும் தற்போது தண்ணீர் மெல்ல வற்றி வருவதால் விவசாயிகள் இத்தருணத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார.

இருப்பினும் அனுமதி கேட்ட காலங்களில் எல்லாம் ஏரிகள் வறண்டு இருந்த போது அனுமதி கிடைப்பதில் கால தாமதம் ஏற்பட்டதும், தற்போது நீர் உள்ளதால் விவசாயிகள் இதனை தவிர்த்து வருவதும் எதிரும் புதிரும் ஆகவே நடைபெற்று வருகிறது என விவசாயிகள் தெரிவித்தனர்.


Updated On: 31 March 2023 7:00 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  2. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  3. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  4. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?
  5. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்
  6. தொழில்நுட்பம்
    3டி அச்சிடப்பட்ட ராக்கெட் எஞ்சினை வெற்றிகரமாக சோதித்த இஸ்ரோ: 3டி...
  7. தொழில்நுட்பம்
    எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சி, e200..! ஐஐடி மெட்ராஸ் சாதனை..!
  8. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலிருந்து எலக்ட்ரானிக் சாதனங்களை பாதுகாப்பது எப்படி?
  9. ஈரோடு
    எடப்பாடி பழனிசாமி 70வது பிறந்த நாள்: பெருந்துறையில் நடமாடும் வாகனம்...
  10. வணிகம்
    விரைவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழக்கமான விமான சேவையை தொடரும்:...