/* */

எம்எல்ஏ பெயரில் போலி வாட்ஸ்அப், யாரும் பணம் செலுத்த வேண்டாம், எழிலரசன் வேண்டுகோள்

காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி வி எம் பி எழிலரசன் பெயரில் போலி வாட்ஸ் அப் குழு உருவாக்கி அவசரத் தேவைக்கு பணம் செலுத்த கோருவதை யாரும் ஏற்க வேண்டாம் என எம்எல்ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

எம்எல்ஏ  பெயரில்  போலி வாட்ஸ்அப், யாரும் பணம் செலுத்த வேண்டாம், எழிலரசன் வேண்டுகோள்
X

காஞ்சிபுரம் எம்எல்ஏ பெயரில் உருவாக்கப்பட்ட போலி வாட்ஸ்அப் குரூப்

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பல்வேறு பிரபலங்கள் பெயரில் போலி முக நூல்கள் , வாட்ஸ்அப் எண்களில் உதவி கேட்பது போல் பண மோசடியில் ஒரு கும்பல் செயல்பட்டு வருகிறது.

அவ்வகையில் கடந்த வாரம் காஞ்சிபுரம் மக்கள் தொடர்பு அதிகாரி மற்றும் உதவி மக்கள் தொடர்பு அதிகாரிகள் பெயரில் போலி வாட்ஸ்அப் ஏற்படுத்தப்பட்டு அவசரத் தேவைக்கு பணம் மீண்டும் எனக் கூறி அவருடைய வாட்ஸ் அப் குழு நண்பர்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர் இதுகுறித்து சைபர் கிரைமில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவிஎம்பி எழிலரசன் பெயரில் போலி வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தப்பட்டு அதில் தனக்கு அவசரத் தேவையாக ₹15,000 தேவையென நம்பருக்கு வாட்ஸ்அப் அனுப்பியுள்ளனர். அவர்களும் இதை உறுதி செய்யாமல் கூகுள் நம்பரை கேட்டு பதில் அனுப்பி உள்ளனர்.

சிறிது நேரம் கழித்து அந்த நண்பர் எம்எல்ஏ உதவியாளரை தொடர்பு கொண்டு இது குறித்து கேட்டபோது இது போலி முகவரி என தெரியவந்தது.

இது போன்று எழிலரசன் என்ற என்னுடைய புகைப்படம் மற்றும் பெயரில் செயல்படும் போலி சமூக ஊடகங்களில் பதிவுகளை நம்பி பணம் அனுப்ப வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Updated On: 6 July 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  4. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  5. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  6. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  7. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  8. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  9. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  10. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்