/* */

காஞ்சியில் போலி மருத்துவர்கள் இருவர் கைது

உரிய மருத்துவ கல்வித் தகுதி இல்லாமல் மருத்துவம் பார்த்ததாக சேஷாத்ரி ராஜு, சுதர்சனபாபு ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

காஞ்சியில் போலி மருத்துவர்கள் இருவர் கைது
X

காஞ்சிபுரம் நகரில் கைது செய்யப்பட்ட போலி டாக்டர்கள் சுதர்சனபாபு, சேஷாத்ரி.

காஞ்சிபுரம் பகுதியில் உரிய மருத்துவ கல்வித் தகுதி இல்லாமல் மருத்துவம் பார்த்த 2 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்ட செயல் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

தமிழகம் முழுவதும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் போலி மருத்துவர்கள் கண்டுபிடித்து களை எடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மருத்துவக் கல்வி அனுபவம் இல்லாமல் சிகிச்சைக்கு செல்லும் பல்வேறு நபர்கள் பல்வேறு உடல் உபாதைகளுக்கு உட்பட்டும் பலர் உயிரிழந்த சர்ச்சைக்குள்ளாகி அது கலவரம் போல் சென்று விடுகிறது. மேலும் பொதுமக்கள் இதுகுறித்து விழிப்புணர்வு மேற்கொள்ளவும் அவ்வப்போது சுகாதாரத்துறை எச்சரித்து வருகிறது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் குறிப்பாக கிராமப்புற பகுதிகளிலும் மாலை நேரங்களில் மருத்துவர்கள் பெயரைக் கொண்டு மருத்துவக் கல்விப் பயிலாத இளைஞர்கள் சிலர் இது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் நகரில் சில பகுதிகளில் சித்த மருத்துவர் என்ற போர்வையில் மருத்துவம் பார்ப்பதாக காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத் துறைக்கு புகார்கள் வந்தது.

அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் கோபிநாத் தலைமையிலான சுகாதாரத் துறையினர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடந்து வரும் மருத்துவமனைகளில் காவல்துறை உதவியுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டு சோதனை செய்தனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட காமாட்சி அம்மன் சன்னதி தெருவில் மருத்துவமனை நடத்தி வந்த சேஷாத்ரி ராஜு,மற்றும் உப தலைவர் பரமசிவம் தெருவில் மருத்துவமனை நடத்தி வந்த சுதர்சன பாபு ஆகிய இருவரும் உரிய மருத்துவ கல்வி தகுதி இல்லாமல் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்ததை கண்டறிந்தனர்.

இதனைத் தொடர்ந்து சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் கோபிநாத் அளித்த புகாரின் பேரில் சேஷாத்திரி ராஜு, சுதர்சன பாபு, ஆகிய இரு போலி மருத்துவர்களை சிவ காஞ்சி காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த ஆய்வின்போது வினை இயக்குனர் கோபிநாத், சித்த மருத்துவர் முத்துக்குமார் , மருந்து தர கட்டுப்பாட்டுஅலுவலர் சுகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்

Updated On: 19 April 2023 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு