/* */

கட்டுமான பொருட்கள் விலை உயர்விற்கு ஆலை அதிபர்களே காரணம்: பொன்.குமார்

கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய கூட்டத்தில் கட்டுமான பொருட்கள் விலை உயர்விற்கு ஆலை அதிபர்களே காரணம் என பொன்.குமார் குற்றசாட்டு

HIGHLIGHTS

கட்டுமான பொருட்கள் விலை உயர்விற்கு ஆலை அதிபர்களே காரணம்:  பொன்.குமார்
X

மாநில பொதுக்குழு கூட்டத்தில் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தலைவர் பொன்குமார் பேசியபோது

தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சி, தமிழக கட்டிடத் தொழிலாளர்கள் மத்திய சங்கம், அமைப்புசாரா தொழிலாளர்கள் மத்திய சங்கம் மற்றும் பொன்குமார் இளைஞரணி ஆகியவை சார்பாக காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் பெருமாள் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில்.நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் தலைவர் பொன் குமார் கலந்துகொண்டு நலவாரியம் குறித்து பல்வேறு ஆலோசனைகள் கூறினார். மேலும் தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களையும் விளக்கிக் கூறினார்.

இதைத்தொடர்ந்து பொதுக்குழு கூட்டத்தில் புதிய மாவட்ட நிர்வாகிகளை தேர்வு செய்தல், தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்குதல் மற்றும் நல வாரிய பிரச்சினைகள் குறித்து தொழிலாளர்களுக்கு கேட்ட சந்தேகங்களை விளக்கினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில் கடந்த 10 ஆண்டுகளில் நலவாரியம் முடக்கப்பட்டு பல லட்சம் உறுப்பினர்கள் காணாமல் போய்விட்டனர். 5 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் புதிதாக இணைக்கப்பட்டனர். கட்டுமான பொருட்களின் விலையால் தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்து அது குறித்து முதல்வரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

4 ஆண்டுகளில் நல வாரியம் சிறப்பாக செயல்பட்டு தொழிலாளர்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் எனவும் தெரிவித்தார். கட்டுமான பொருட்களின் விலை ஏற்றம் ஆலை உரிமையாளரின் கூட்டு சதி என்று குற்றம் சாட்டினர்.

இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சங்கர் , மாவட்ட இணை செயலாளர் சந்திரசேகர் , மாவட்ட பொருளாளர் சுப்பிரமணி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Updated On: 5 May 2022 7:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  2. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  3. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  4. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  5. ஈரோடு
    அந்தியூரில் மாம்பழ குடோன்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர்
  6. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  7. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  8. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  9. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  10. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!