/* */

பொங்கல் இனித்தாலும், பூக்கள் விலையில் வாசனை இல்லை..

காஞ்சிபுரம் பூ சந்தையில் மல்லியின் விலை கிலோ ரூ. 2000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதால் பண்டிகை கொண்டாட்டத்தில் பூக்களின் பயன்பாடு குறையத் தொடங்கியது.

HIGHLIGHTS

பொங்கல் இனித்தாலும், பூக்கள் விலையில் வாசனை இல்லை..
X

பூக்கள் வாங்கக் குவிந்த மக்கள்.

பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடுவதை முன்னிட்டு பூக்கள் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் மல்லி மற்றும் முல்லை பூ விலை கிலோ ரூ.2000 வரை உயர்ந்ததால் பொதுமக்கள் குறைந்த அளவே பூக்களை வாங்கிச் சென்றனர்.

தமிழர் திருநாளன பொங்கல் பண்டிகை நாளை உலகம் முழுவதும் கொண்டாடும் வகையில் உங்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் பூஜை பொருட்களை வாங்க பொதுமக்கள் அதிகளவில் கூட்டமாக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதில் பூஜை பொருள்களுக்கு மிக முக்கியமாக பயன்படுத்தப்படும் பூக்கள் வாங்க காஞ்சிபுரம் பூக்கடை சத்திரத்தில் அதிகாலை முதலே சிறு வியாபாரிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் பூக்களை வாங்கி செல்வதற்காக குவிந்து வருகின்றனர்.

பூக்கள் வரத்தை அதிகரிக்கும் காரணமாக வாசனைப் பூக்களைத் தவிர ரோஜா பூ கிலோ ரூ.250 முதல் ரூ.300, சாமந்தி பூ ரூ.150 முதல் ரூ.200ரூ, காகாட்டா மல்லி கிலோ ரூ.1000 முதல் ரூ.1200வரையிலும் விற்பனையாகி வருகிறது. வாசனை பூக்களான மல்லிப்பூ ரூ.2000 மற்றும் முல்லைப்பூ ரூ.2000 விற்பனையாகி வருகிறது.

வாசனை பூக்களின் விலை ஏறுமுகத்தில் உள்ளதால், அதனைத் தவிர்த்து மற்ற பூக்களை நாளை பொங்கல் திருவிழாவை கொண்டாடுவதற்காக காலை முதலே கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் மற்றும் சிறு வியாபாரிகள் பூக்களை வாங்கி செல்வதால் பூக்கடை சத்திரம் முழுவதும் கூட்டம் நிரம்பி வருகிறது.

பூக்கள் விலை சற்று குறைந்திருந்தால் திருக்கோயில்களில் பூக்களின் அலங்காரம் சற்று குறைவதற்கு காணப்படும் எனவும், வீடுகளிலும் தற்போது பூக்களின் அலங்காரம் என்பது ஒரு வகையான ஆர்ப்பரிப்பை தந்த நிலையில் மல்லி மற்றும் முள்ளையை தவிர்த்து இதர பூக்களை வண்ணங்கள் கொண்ட மலர்களை அதிக அளவில் வாங்கி செல்வதாக பூ வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மக்கள் பொதுவாகவே உடை மற்றும் அழகுப் பொருட்களின் விற்பனை அதிகரித்த நிலையில் பண்டிகைக்கு முக்கிய பொருள்களுக்கான பானைகள் மற்றும் பூக்கள் பழங்கள் ஆகியவற்றை குறைந்த அளவே வாங்கி சென்று அதை ஒரு சம்பிரதாயமாகவே செய்து வருவது வருத்தமளிப்பதாக தெரிவித்தனர்.

Updated On: 14 Jan 2023 5:00 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...