/* */

கல்குவாரிகளால் சுற்றுச் சூழல் பாதிப்பு என மாவட்ட ஆட்சியரிடம் புகார்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டத்தில் கல்குவாரிகளால் சுற்றுச் சூழல் பாதிப்பு என மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

கல்குவாரிகளால் சுற்றுச் சூழல் பாதிப்பு என மாவட்ட ஆட்சியரிடம் புகார்
X

கிராமத்தில் பயிரிடப்பட்ட செடிகளில் கல்துகளின் தூசு படிந்து காணப்படும் பயிர் வகைகள்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம் சிறுதாமூர் பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தனியார் கல் குவாரி இயங்கி வருவதால் இந்த பகுதியில் மறு உற்பத்தி செய்யமுடியாத பசுமை போர்த்திய மலைகள் மரங்கள் அழிந்து வருவதாக மாவட்ட ஆட்சியரிடம் இன்று அக்கிராம சார்பாக மனு அளிக்கப்பட்டது.

இக் கல்குவாரிகளால் விவசாயம் குடிநீர் ஆடு மாடுகள் அனைத்தும் அழிந்து வருகின்றன. மேலும் இந்த கல் குவாரிகளுக்கு செயல்படும் கனரக லாரிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வாகன விபத்தில் சிக்கி உடல் உறுப்புகளை இழந்து உள்ளனர் எனவும், உடனடியாக சுற்றுச்சூழல் கருத்தில் கொண்டு சிறுதாமூர் ஊராட்சியில் செயல்படும் கல் குவாரிகளில் கிரஷர்களையும் சிறப்பு கிராம சபை கூட்டி அனைத்து தொழிற் சாலைகளில் மூட தீர்மானம் நிறைவேற்ற மாவட்ட ஆட்சியர் கிராம ஊராட்சி பிரதிநிதிகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

ஏற்கெனவே நடைபெற்ற இரண்டு மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பொதுமக்கள் இப்பகுதியில் அமைய எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

படவிளக்கம் :

Updated On: 25 March 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!