/* */

காஞ்சிபுரம்: பாஜக - திமுக வேட்பாளர் கட்டியணைத்து பரஸ்பர வாக்கு சேகரிப்பு

5 வார்டு பகுதியில் திமுக வேட்பாளர் , பாஜக வேட்பாளர் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டபோது கட்டி அணைத்து பரஸ்பரமாக வாக்களிக்க கோரினர்

HIGHLIGHTS

காஞ்சிபுரம்: பாஜக - திமுக வேட்பாளர் கட்டியணைத்து பரஸ்பர வாக்கு சேகரிப்பு
X

5வார்டு பகுதியில் பாஜக மற்றும் திமுக வேட்பாளர்கள்  கட்டியணைத்து வாழ்த்துகளை பரிமாறிக்கொண்ட போது

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு சேகரிப்புக்கு இன்னும் சில தினங்களே கால அவகாசம் உள்ள நிலையில் இன்று காலை முதலே வேட்பாளர்கள் தங்கள் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேட்பாளர்கள் வாக்காளர்களை கவர பூ விற்பனை‌, பால் விற்பனை , பரோட்டா சுடுதல் , காய்கறி விற்பனை , நெசவு செய்தல் போன்ற வித்தியாசமான வேடங்களில் வாக்கு சேகரித்து வருகின்றனர் .

அவ்வகையில் இன்று 5வது வார்டு பகுதியான ராயன் குட்டை பகுதியில் திமுக வேட்பாளர் இலக்கியாசுகுமார் வாக்கு சேகரித்து வந்து கொண்டிருந்த போது எதிர் திசையில் பாஜக வேட்பாளர் தமிழ்செல்வியும் வாக்கு சேகரித்து கொண்டு வந்து கொண்டிருந்தார்.

இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டபோதும் இருவரும் கட்டி அணைத்து தேர்தலில் வெற்றிபெற வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். மேலும் இருவரும் வாக்கு கேட்டு தங்கள் துண்டு பிரசுரங்களை பரிமாறிக் கொண்டனர்.

அதன்பின் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருந்த போது அங்கிருந்த வாக்காளர்கள், "இப்படி சிக்கிக் கொண்டோமே" என காமெடியாக தெரிவித்தபோது அங்கு சிரிப்பொலி எழுந்தது.

Updated On: 15 Feb 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்