/* */

சேதமடைந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி: புதியதாக அமைக்க மக்கள் கோரிக்கை

Grama Sabha Meeting -50 வது வார்டு பகுதியில் நடைபெற்ற பகுதி சபா கூட்டத்தில் கலந்து கொண்ட மண்டல குழு தலைவர் சாந்தி சீனிவாசனிடம் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தினர்.

HIGHLIGHTS

சேதமடைந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி: புதியதாக அமைக்க மக்கள் கோரிக்கை
X

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 50 வது வார்டு பகுதியில் நடைபெற்ற பகுதி சபா கூட்டத்தின் போது புகார் தெரிவித்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினை ஆய்வு செய்து மண்டல குழு தலைவர் சாந்தி சீனிவாசன் ,  மாமன்ற உறுப்பினர் சங்கர் உடன் சுகாதார  ஆய்வாளர் லட்சுமிபிரியா.

Grama Sabha Meeting -தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தினமான நேற்று அனைத்து மாநகராட்சி நகராட்சி ஊராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபா கூட்டங்கள் நடைபெற்றது. இதில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் , கலைஞர் வீடு வழங்கும் திட்டம் , ஜல் ஜீவன் திட்டம், அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மற்றும் தூய்மை பணியாளர் மகளிர் சுய உதவி குழுக்களை பாராட்டுதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற அறிவுறுத்தப்பட்டு கூட்டங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 274 ஊராட்சிகளில் நேற்று கிராம சபா கூட்டம் நடைபெற்றது. மேலும் காஞ்சிபுரம் மாநகராட்சி , குன்றத்தூர், மாங்காடு, வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட நகராட்சி, பேரூராட்சிகளிலும் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது.

குறுகிய காலத்தில் இவர்களுக்கு உத்தரவு அறிவிக்கப்பட்டதால் வரும் நான்காம் தேதிக்குள் அனைத்து பகுதிகளிலும் பகுதி சபா கூட்டங்கள் நடத்த கால அவகாசம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் உள்ள 51 மாநகராட்சி வார்டுகளில் பகுதி சபா கூட்டங்கள் நடத்த அந்தந்த மாமன்ற உறுப்பினர்கள் தலைமையில் உருவாக்கப்பட்ட குழு நடத்தப்பட வேண்டும் என மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் அறிவுறுத்தி இருந்தார்.

அவ்வகையில் முதல்நாள் காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பாக 18 வார்டுகளில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் தனது ஒன்பதாவது வார்டு பகுதியில் நடைபெற்ற கூட்டங்களில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு பகுதி கூட்டங்கள் குறித்து எடுத்துரைத்து பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

இந்நிலையில் நேற்று 2வது நாளாக காஞ்சிபுரம் மாநகராட்சியில் 11 வார்டுகளில் பகுதி சபா கூட்டங்கள் நடைபெறும் எனவும் அதற்கான வார்டுகள் அறிவிக்கப்பட்டது.

இன்று மூன்றாவது நாளாக 13 வார்டுகளில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. இதில் 50 வது வார்டு பகுதியில் மாமன்ற உறுப்பினர் சங்கர் மற்றும் மண்டலக் குழு தலைவர் சீனிவாசன் தலைமையில் சின்ன அய்யங்குளம் காலணி பகுதியில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அப்பகுதி பொதுமக்கள் அங்குள்ள அங்கன்வாடி மையம் பழுதடைந்து மழைக் காலங்களில் நீர்க்கசிவதாகவும் , இதனால் குழந்தைகள் ஆபத்தான நிலையில் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் அதனை புதிய கட்டிடமாக அல்லது மறு சீரமைத்து தர கோரினர்.

இதேபோல் இப்பகுதியில் உள்ள 150 வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதாகவ உள்ளதாகவும், அதற்கு பதில் அதிக கொள்ளளவு கொண்ட புதிய நீர்த்தேக்க தொட்டி அமைத்து தர வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

இதைத் தொடர்ந்து அந்த இரண்டு பகுதியிலும் மண்டல குழு தலைவர் சாந்தி சீனிவாசன், மாமன்ற உறுப்பினர் சங்கர் ஆகியோர் ‌ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது நகராட்சி சுகாதார ஆய்வாளர் லட்சுமி பிரியா , மாமன்ற உறுப்பினர் கார்த்திக், திமுக நிர்வாகி மலர்மன்னன் உள்ளிட்டோர் இருந்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 4 Nov 2022 6:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  2. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  3. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!
  4. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  5. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  6. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  7. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  8. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்