/* */

காஞ்சிபுரத்தில் ஊராட்சி நிர்வாகம் தொடர்பான கலந்தாய்வு கூட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் எஸ்சி எஸ்டி ஊராட்சி மன்ற தலைவர்களுடன் ஊராட்சி நிர்வாகம் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் ஊராட்சி நிர்வாகம் தொடர்பான கலந்தாய்வு கூட்டம்
X

மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமையில் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்சி எஸ்டி ஊராட்சி மன்ற தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற போது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின கிராம ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான, ஊராட்சி நிர்வாகம் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம், கிராம சபை கூட்டம், நெகிழி மேலாண்மை, திறந்தவெளி மலம் கழித்தலற்ற ஊராட்சி, தெரு விளக்குகள் பராமரிப்பு, ஊராட்சி சாலைகள், ஆக்கிரமிப்பு அகற்றுதல், குடிநீர் பராமரிப்பு, மத்திய – மாநில அரசு சிறப்பு திட்டங்கள், பள்ளிகள் பராமரிப்பு, இணையதள வரிவசூல், ஜெம் போர்டல் – கணினி வாங்குதல் (Gem Portal-Computer Purchase), தெருக்களுக்கு சூட்டப்பட்டுள்ள தலைவர்களின் பெயர்களிலுள்ள சாதிய குறியீடுகள்/பின்னொட்டுகள் நீக்குதல், மின் கட்டண நிலுவை மற்றும் கூட்டு குடிநீர் கட்டண நிலுவை, வணிக வளாகங்கள், சுயநிதி கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் சுய மதிப்பீட்டு தாள் ஆகியவை பற்றி மேற்கொள்ளப்பட்டது.

மேலும் ஊராட்சி மன்ற தலைவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

இக்கூட்டத்தில் பேசிய ஆட்சியர் ஆர்த்தி கூறுகையில், பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் சுகாதாரமாக இருக்கும் நிலையை உறுதிப்படுத்த வேண்டும். சரியான அளவு குளோரின் கலந்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்.

மேலும் கிராமங்களில் அரசு செயல்படும் திட்டங்களின் முறையாக தொய்வின்றி செயல்படுத்த வேண்டும். கிராம சபைகள் கூட்டங்கள் நடத்தும்போது முறையான அறிவிப்பு அனைவருக்கும் அறிவிக்க வேண்டும். ஊராட்சி மன்ற செயல்பாடுகள் அனைவருக்கும் எவ்வித பாகுபாடு இன்றி இருத்தல் வேண்டும்.

பள்ளி பள்ளிகளில் முறையான கழிவறை வசதிகள் உள்ளதா என்பதையும் அதை பராமரிக்கும் ஊழியருக்கு சரியான உபகரணங்கள் வழங்க வேண்டும் என கூறினார்.

மேலும் ஊராட்சியில் தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள் இணைந்து செயல்பட வேண்டும் எனவும், இதில் ஏதேனும் குளறுபடிகள் ஏற்பட்டால், அது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதன் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பெண் ஊராட்சி மன்ற தலைவர்களிடம் கருத்து கேட்டபோது, பலர் தங்களுக்கு சுதந்திரமாக செயல்பட சில எதிர்ப்புகள் அவ்வப்போது எழுவது உண்மை என்றும், அதை உரிய முறையில் தீர்த்துக் கொள்ள அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இந்த ஆய்வு கூட்டத்தில், ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில் செயல்பட்டு வரும் பழங்குடியினர் ஆதிதிராவிட ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதேவி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மணிமாறன், வாலாஜாபாத் ஒன்றியக் குழுத்தலைவர் தேவேந்திரன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 3 Jan 2023 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’