/* */

11 மக்கள் நீதிமன்றத்தில் 600 வழக்குகளுக்கு சமரச தீர்வு இலக்கு

காஞ்சிபுரம் மாவட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் நடைபெறும் மக்கள் நீதி மன்ற முகாமினை மாவட்ட நீதிபதி சந்திரன் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

11 மக்கள் நீதிமன்றத்தில் 600 வழக்குகளுக்கு சமரச தீர்வு இலக்கு
X

மாவட்ட நீதிபதி சந்திரனிடமிருந்து மக்கள் நீதிமன்ற சமரச தீர்வு மூலம் நஷ்ட ஈடு பெற்றுக்கொண்ட குடும்பத்தினர்.

காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் காஞ்சிபுரம் மாவட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் மாதந்தோறும் மக்கள் நீதி மன்ற முகாம் நடைபெறுவது வழக்கம்.

இதில் மோட்டார் வாகன விபத்து , காசோலை மோசடி , நிலப்பிரச்சைகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளுக்கு இருதரப்பும் நீதிபதி முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தைகள் நடைபெற்று முடிவு பெறும்.

இதனால் வழக்கு காலதாமதத்தை குறைக்கும் வகையில் செயல்படுவதால் இந்த மக்கள் நீதிமன்றம் முகாம் பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அவ்வகையில் இன்று காஞ்சிபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள நீதிமன்ற வளாகத்தில் காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி சந்திரன் தலைமையில், சட்டப் பணிகள் குழு நீதிபதி ஞானசம்பந்தன் முன்னிலையில் மற்றும் அரசு வழக்கறிஞர் கார்த்திகேயன் உள்ளிட்ட வழக்குகள் கலந்துகொண்ட துவக்கவிழா நடைபெற்றது. இதில் மூன்று குடும்பங்களுக்கு சமரச தீர்வு வகையில் நஷ்ட ஈடு வழங்கபட்டது.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட நீதிபதி சந்திரன், மாவட்டத்தில் காஞ்சிபுரத்தில் 8 நீதிமன்றங்களிலும், ஸ்ரீபெரும்புதூரில் இரண்டு நீதிமன்றங்களிலும், உத்தரமேரூர் நீதிமன்றத்திலும் இந்த மக்கள் நீதி மன்ற முகாம் நடைபெறுவதாகவும் இதில் 600 வழக்குகள் கையாள இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதன் மூலம் ரூபாய் 15 கோடி மதிப்பிலான நஷ்ட ஈட்டுத் தொகை வழங்க இயலும் எனவும் தெரிவித்தார்.

இதில் மாவட்ட கூடுதல் , சார்பு நீதிபதிகள் , வழக்கறிஞர்கள் வாதி மற்றும் பிரதிவாதிகள் என ஏராளமானோர் இந்த சமரச தீர்வு முகாமில் கலந்து கொண்டனர்.

Updated On: 12 March 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  3. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  5. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  6. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  7. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  8. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  9. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  10. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!