/* */

குழந்தைகள் நமது நண்பர்கள்: கைப்பட்டை அணிவித்த ஆட்சியர் ஆர்த்தி

காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் குழந்தைகள் நமது நண்பர்கள் எனும் கைப்பட்டையை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்

HIGHLIGHTS

குழந்தைகள் நமது நண்பர்கள்:  கைப்பட்டை  அணிவித்த ஆட்சியர் ஆர்த்தி
X

குழந்தைகள் தினத்தை ஒட்டி மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி குழந்தைகள் நமது நண்பர்கள் எனும் வாசகம் கொண்ட கைப்பட்டையை குழந்தைகள் கையில் அணிவித்த போது.

முன்னாள் பாரத பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு பிறந்த தினத்தை ஆண்டுதோறும் நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

தற்போது உள்ள கால சூழ்நிலையில் குழந்தைகள் பாதுகாப்பு என்பது தற்போது கேள்விக்குறியாக உள்ளது. இதை தவிர்க்கும் பொருட்டு குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் குழந்தைகள் நமது நண்பர்கள் எனும் விழிப்புணர்வு வாசகத்தை முன்னிறுத்தி விழிப்புணர்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவல அறையில் மாவட்ட குழந்தைகள் நல அமைப்பு சார்பில் குழந்தைகள் நமது நண்பர்கள் எனும் போஸ்டர் மற்றும் குழந்தைகள் கையில் அணியும் பட்டைகள் ஆகியவற்றின மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி வெளியிட்டு குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி கைப்பட்டையை அணிவித்தார்.

அலுவலர்கள் கூறுகையில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து கல்வித்துறை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து உதவிகளும் செய்யப்படும் என தெரிவித்தார்

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பன்னீர்செல்வம் , குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மதியழகன், Hand in Hand மோகனவேல் , குழந்தைகள் பாதுகாப்பு மைய அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Updated On: 15 Nov 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...