/* */

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றி திரிந்த மாடுகள் பறிமுதல்

காஞ்சிபுரம் மாநகர சாலைகளில் பொது மக்களுக்கு இடையூறாகவும் , அச்சுறுத்தும் வகையில் சுற்றி திரிந்த கால்நடைகளை பிடித்தனர்.

HIGHLIGHTS

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றி திரிந்த மாடுகள் பறிமுதல்
X

காஞ்சிபுரம் மாநகராட்சி சாலையில் சுற்றித்திரிந்த கால்நடைகளை பறிமுதல் செய்யும் குழுவினர்

சாலைகளில் பொது மக்களுக்கு இடையூறு சுற்றி திரிந்த கால்நடைகளை காஞ்சிபுரம் மாநகராட்சி குழு பிடித்து பராமரிப்பு நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

தமிழக முழுவதும் உள்ள மாநில தேசிய நெடுஞ்சாலை கால்நடைகள் சுற்றி வருகதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சாலை விபத்துக்களை சந்திக்கின்றனர். மேலும் விபத்தில் உடல் உறுப்புகளையும் சில சமயங்களில் உயிரிழப்பையும் சந்திக்க நேருகிறது.

இதுகுறித்து காவல்துறையினர் பல்வேறு எச்சரிக்கை அளித்தும் இது போன்ற சம்பவங்களில் கால்நடை உரிமையாளர்கள் மீது வழக்கு தொடரப்படும் எனவும் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.

இவைகள் அனைத்தையும் கால்நடை உரிமையாளர்கள் சற்றும் பின்பற்றாமல் கால்நடை தீவனத்திற்காக மாடுகளை அவிழ்த்துவிட்டு தொடர்ச்சியாக இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் சிறுமி ஒருவரை சாலையில் சுற்றி திரிந்த கால்நடை பந்தாடி காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், சாலைகளில் சுற்றி தெரியும் கால்நடைகளை மாநகராட்சிகள் பிடித்து அதற்கு அபராதம் விதித்து உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.

பொது மக்களுக்கு இடையூறாகவும் அச்சுறுத்தலும் ஏற்படுத்திய கால்நடைகளை பறிமுதல் செய்யும் மாநகராட்சி குழுவினர்.

அதன் அடிப்படையில், காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை, ரங்கசாமி குளம் பகுதியில் சுற்றித்திரிந்த 9 கால்நடைகளை பிடித்து வாகனத்தில் ஏற்றி ஜவ்வாது மலை பகுதியில் கால்நடை பராமரிப்பு நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் கால்நடைக்கு தேவையான தீவனங்களும் அந்த வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின் போது வட்டாட்சியர் புவனேஸ்வரன், மாமன்ற உறுப்பினர்கள் கார்த்திக், குமரன், சங்கர் , கால்நடை மருத்துவர்கள், மாநகராட்சி ஊழியர்கள் என பலர் இருந்தனர்.

Updated On: 12 Aug 2023 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்