/* */

சாலையின் குறுக்கே சென்ற கால்நடை: வாகனத்தின் மீது மோதியதில் வாலிபர் பலி

காஞ்சிபுரம்-அரக்கோணம் சாலையில் சுற்றித் திரிந்த கால்நடை திடீரென வாகனத்தின் மீது மோதியதில் வாலிபர் நிலை தடுமாறி விழுந்து பலி.

HIGHLIGHTS

சாலையின் குறுக்கே சென்ற  கால்நடை: வாகனத்தின் மீது மோதியதில் வாலிபர் பலி
X

பைல் படம்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேசிய மற்றும் மாநில, நகர சாலைகளில் அதிகளவில் கால்நடைகள் சுற்றித் திரிகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையினர் எச்சரிக்கை அளித்தும் கால்நடை உரிமையாளர்கள் இதை சற்றும் மதிக்காமல் தங்கள் கால்நடைகளை சாலைகளில் உலவ விட்டு வருகின்றனர். இதில் சிக்கி பலருக்கு லேசானது முதல் பலமான காயங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும், சிலர் உயிரையம் இழந்துள்ளனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம்-அரக்கோணம் சாலையில் ஏகாம்பரநாதர் கோயில் பகுதியை சேர்ந்த ஜெயசம்பத்குமார் என்பவர் பணிக்கு சென்று விட்டு நேற்று இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது வெள்ளை கேட் பகுதியில் சாலையில் குறுக்கே கால்நடைகள் நின்று கொண்டிருந்தது. இருசக்கர வாகனத்தில் வந்த சம்பத்குமார் கால்நடைகளை கடந்த செல்ல முயன்றபோது திடீரென கால்நடை மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்து தலையில் பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 31 Aug 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு