/* */

வாக்காளர்களை பல்வேறு விதமாக கவர்ந்து வாக்கு சேகரித்த வேட்பாளர்கள்

வாக்காளர்களை கவர டீ மாஸ்டர், ரோட்டு டிபன் கடை, கொசுவலை அணிந்து என பல்வேறு விதங்களில் வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்கள்

HIGHLIGHTS

வாக்காளர்களை பல்வேறு விதமாக  கவர்ந்து வாக்கு சேகரித்த வேட்பாளர்கள்
X

வாடிக்கையாளருக்கு டீ போட்டு கொடுத்து வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்

காஞ்சிபுரம் மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இன்னும் சில தினங்களே வாக்கு சேகரிப்பில் ஈடுபட முடியும் என்பதாலும், இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தனம் என்பதால் வாக்காளர்களை சந்தித்து தங்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் தீவிரமாக அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அவ்வகையில் வேட்பாளர்கள் வாக்காளர்களை கவர டீக்கடையில் டீ மாஸ்டராகவும் , சாலையோர உணவகத்தில் உணவு விற்பனையாளராகவும் , கொசுவை ஒழிப்பேன் என கூறி கொசுவலை போர்த்தியபடி , துரித உணவகத்தில் உணவு தயாரிப்பாளராகவும் என பல்வேறு விதமாக வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


வித்தியாசமாக பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கும் போது தங்கள் சின்னம் வாக்காளர் மனதில் பதியும் என்பதால் இதுபோன்ற பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்

Updated On: 13 Feb 2022 6:45 AM GMT

Related News