/* */

களக்காட்டூர் : பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் பஸ் இயக்க கோரிக்கை

காஞ்சிபுரம் - களக்காட்டூர் இடையே பள்ளி நேரங்களில் மாணவர்களுக்கான அரசு பேருந்து சேவையை மீண்டும் தொடங்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

களக்காட்டூர் : பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் பஸ் இயக்க கோரிக்கை
X

கோப்பு படம்

காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில் உள்ள கிராமங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்கள் கல்வியை கற்க, அருகிலுள்ள காஞ்சிபுரம் பகுதியை நாடும் நிலைமை உள்ளது. கடந்த காலங்களில், இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக, பல நிறுத்தங்களில் நிறுத்த இயலாத நிலையில், அரசுப் பேருந்துகளுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

இதையடுத்து, காஞ்சிபுரம் களக்காட்டூர் இடையே, பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மட்டும் செல்லும் வகையில் பள்ளி நேரங்களில் பேருந்துகளை இயக்க, பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்ற அரசு போக்குவரத்து கழகம், காலை 8 மணி அளவில் பள்ளி , கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு பேருந்து இயக்கியது. கொரோனா பரவல் காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டு, பேருந்து சேவை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், இன்று முதல் பள்ளிகள் திறந்துள்ளதால், மீண்டும் பள்ளி நேர பேருந்து சேவையை, போக்குவரத்துத்துறை துவங்க வேண்டும் என்று, பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். பேருந்துகள் இல்லாததால் ஆட்டோக்களில் அதிகளவு பள்ளி மாணவர்களை ஆபத்தாக ஏற்றிச் செல்லும் நிலைமையை தவிர்க்க, அரசு பேருந்து சேவை மிக அவசியம் என கருதப்படுகிறது.

Updated On: 1 Nov 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’