/* */

பள்ளிகள் விடுமுறையால் காலை உணவை காப்பகம் மற்றும் அளித்த மாநகராட்சி

காஞ்சிபுரத்தில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்ததால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை மாவட்ட ஆட்சியரால் அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

பள்ளிகள் விடுமுறையால் காலை உணவை காப்பகம் மற்றும் அளித்த மாநகராட்சி
X

தொடக்க பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக தயார் செய்யப்பட்ட காலை உணவு விடுமுறை விடப்பட்டதால் உணவு வீணாகாமல் பொது மக்களுக்கு  அளிக்கும்   காட்சி.

தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சிகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் தொடக்கப் பள்ளியில் மாணவர்கள் புத்துணர்வு மற்றும் ஊட்டச்சத்து உடன் கல்வி பயிலும் வகையில் காலை சிற்றுண்டி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நாள்தோறும் வெவ்வேறு வகையான ஊட்டச்சத்து உணவுகள் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது இதனை பொதுமக்கள் மற்றும் பல்வேறு மாநில முதல்வர்களும் வரவேற்று தங்கள் மாநிலங்களில் பின்பற்ற ஆலோசனை செய்து வருகின்றனர்.

மேலும் இத்திட்டம் தமிழ்நாடு முழுவதும் அனைத்து துவக்க பள்ளிகளிலும் செயல்படுத்த திட்டமிட்டு அதற்கான சமையலறை , பணியாளர்கள் அமர்த்தும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் இத்திட்டம் துவங்கப்பட்ட நாள் முதலே செயல்பட்டு வருகிறது காலை ஏழு முப்பது மணி முதலே உணவு விநியோகம் பணியினை துவக்கி அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி தூங்குவதற்கு முன்பே பள்ளி தலைமை ஆசிரியரிடம் உணவு ஒப்படைக்கப்படுகிறது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் அதிகாலை முதலே பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூரில் 8 செமீ , காஞ்சிபுரத்தில் 7.7 செ.மீ என மழை பதிவாகியுள்ளது. மேலும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளிகளுக்கு மட்டும் இன்று மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் விடுமுறையை காலை 7 மணிக்கு அறிவித்தார்.

இந்நிலையில் ஏற்கனவே காலை உணவு திட்டத்திற்காக இன்று தயார் செய்யப்பட்ட உணவை அளிக்கும் அளிப்பதில் சிக்கல் இருப்பதால் உடனடியாக மேயர் மற்றும் ஆணைகளை தொடர்பு கொண்டு ஊழியர்கள் கேட்டபோது பள்ளி விடுமுறை என்பதால் உணவை வீணாக்காமல் அருகில் உள்ள குழந்தைகள் காப்பகம் மற்றும் பொதுமக்களுக்கு எந்தவித பிரச்சினையும் இன்றி விநியோகிக்க அறிவுறுத்தியுள்ளனர்.


இதனைத் தொடர்ந்து ஊழியர்கள் பெரிய காஞ்சிபுரம் பகுதியில் உள்ள தனியார் குழந்தைகள் காப்பகம் மற்றும் பிள்ளையார்பாளையம் பகுதியில் உள்ள ஏழை எளிய மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வாகனத்துடன் சென்று இலவசமாக உணவை வழங்கினர்.

மகிழ்ச்சியுடன் பெற்றுச் சென்ற பொதுமக்கள் உணவு பொருட்களை வீணாக்காமல் உரிய காலத்தில் வழங்கிய செயலை பாராட்டியுள்ளனர்.

Updated On: 19 Jun 2023 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு