/* */

மாகரல் ஸ்ரீ வீற்றிருந்த பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவ விழா

அருள்மிகு ஸ்ரீ கமலவல்லி தாயார் சமேத ஸ்ரீ வீற்றிருந்த பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவ விழா இன்று துவங்கி வரும் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

மாகரல் ஸ்ரீ வீற்றிருந்த பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவ விழா
X

கருட வாகனம் பொறித்த பிரம்மோற்சவ விழா கொடிக்கு சிறப்பு பூஜைகள் மேற்கொண்ட பட்டாச்சாரியார்கள்.

காஞ்சிபுரம் அடுத்த மாகரல் அருள்மிகு ஸ்ரீ கமலவல்லி தாயார் சமேத ஸ்ரீ வீற்றிருந்த பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம் அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கோயில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் பல்வேறு திவ்ய தேசங்களும், பரிகார தளங்களும் அமைந்துள்ளது. இது மட்டும் இல்லது சுற்றுப்புற பகுதியிலுள்ள பல்வேறு திருக்கோயில்களில் பாடல் பெற்றது தளங்களும் அமைந்துள்ளது.

அவ்வகையில் காஞ்சிபுரத்திலிருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் மாகரல் கிராமத்தில் செய்யாற்றின் கரையோரம் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ கமலவல்லி தாயார் சமேத ஸ்ரீ வீற்றிருந்த பெருமாள் திருக்கோயில்.

பல ஆண்டுகளுக்கு முன்பு தடைப்பட்ட பிரம்மோற்சவம் இந்த வருடம் இந்து சமய அறநிலைத்துறை அறிவுறுத்தலின்படி நடத்த விழா குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். அவ்வகையில் இன்று காலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் மேஷ லக்னத்தில் பிரமோற்சவ கொடியேற்ற விழா நடைபெற்றது.


முன்னதாக ஸ்ரீ வீற்றிருந்த பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் சிறப்பு மலர் அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருள திருக்கோயில் பட்டர் சந்தான கிருஷ்ணன் அவர்களால் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு கருட உருவம் பொறித்த கொடி கொடிமரத்தில் மேளதாளம் முழங்க த்வஜாரோஹணம் என அழைக்கப்படும் பிரம்மோற்சவ கொடியேற்ற விழா வெகு சிறப்பாக கோவிந்தா கோவிந்தா என்று பக்தர்கள் முழங்க நடைபெற்றது.

பத்து நாள் நடைபெறும் இந்த பிரம்மோற்சவ விழாவில் நாள்தோறும் காலை மற்றும் மாலை என இரு வேலைகளிலும் சூரியபிரபை, சந்திர பிரபை, அனுமந்த வாகனம், குதிரை வாகனம், யானை வாகனம், யாளி வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் ஸ்ரீ வீற்றிருந்த பெருமாள் எழுந்தருளி கிராம வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.



பிரம்மோற்சவம் முக்கிய நிகழ்வான கருட சேவை நிகழ்ச்சி சனிக்கிழமை காலை நடைபெறும். வரும் பத்தாம் தேதி காலை திருத்தேர் உற்சவமும் 12-ம் தேதி வெள்ளிக்கிழமை தீர்த்த வாரி உற்சவமும் நடைபெறும் என விழா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் சுரேஷ் தெரிவித்தனர்.

Updated On: 4 May 2023 2:15 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
  2. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!
  3. வீடியோ
    வள்ளுவனை உலக முழுவதும் எடுத்து சென்ற தலைவன் மோடி !! #modi #thirukkural...
  4. வீடியோ
    திருக்குறளை 100 மொழிகளில் மொழியாக்கம் செய்யும் Modi !#thirukural...
  5. வீடியோ
    Delhi-யில் இனிமே நம்ம தான் Annamalai Mass || #annamalai #delhi...
  6. வீடியோ
    ஊழலில் மிதக்கும் ஆம்ஆத்மிகிழித்து தொங்கவிட்ட...
  7. திருப்பூர்
    திருப்பூரில் புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி
  8. வீடியோ
    Modi-யை எதிர்க்க Aam Aadmi செய்த கீழ்த்தரமான செயல் !#annamalai...
  9. லைஃப்ஸ்டைல்
    மலர்கள், செடிகளின் வண்ணத்துப்பூச்சிகள்..!
  10. பல்லடம்
    பல்லடம் பொங்காளியம்மன் கோவில் திருப்பணி; அமைச்சா் சேகா்பாபு நேரில்...