/* */

உலக அமைதிக்காக கூட்டு தியானத்துக்கு பிரம்ம குமாரிகள் இயக்கம் அழைப்பு

பிரம்மா குமாரிகள் அமைப்பின் தமிழக மண்டல பொன்விழா வரும் அக்டோபர் 8 மற்றும் 9 தேதிகளில் சென்னை சுங்குவார்சத்திரம் பகுதிகளில் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

உலக அமைதிக்காக கூட்டு தியானத்துக்கு பிரம்ம குமாரிகள் இயக்கம்  அழைப்பு
X

காஞ்சிபுரத்தில் பிரம்ம குமாரிகள் இயக்கம் சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பின் பொன் விழா நிகழ்ச்சி குறித்து விளக்கிய போது எடுத்த படம்.

பிரம்மா குமாரிகள் அமைப்பின் தமிழக மண்டல பொன்விழா வரும் அக்டோபர் 8 மற்றும் 9 தேதிகளில் சென்னை சுங்குவார்சத்திரம் பகுதிகளில் நடைபெற உள்ளது.

பிரம்ம குமாரிகள் இயக்கத்தின் சார்பில் நடைபெறவுள்ள பொன் விழா ஆண்டு நிகழ்ச்சி குறித்த செய்தியாளர் கூட்டம் காஞ்சிபுரம் கரிக்கினில் அமர்ந்தவள் கோயில் தெருவில் உள்ள பிரம்ம குமாரிகள் இயக்கம் தியான அரங்கில், அதன் ஊடகப்பிரிவு தலைவர் கருணா, தமிழ்நாடு மண்டல சேவை ஒருங்கிணைப்பாளர்கள் பீனா , திருவண்ணாமலை உமா, தமிழ் துறை ஜெயக்குமார் மற்றும் காஞ்சிபுரம் பொறுப்பாளர் அகிலா ஆகியோர் இணைந்து செய்தியாளர்கள் சந்தித்தனர்.

பிரம்ம குமாரிகள் இயக்கத்தின் சார்பில் தமிழ்நாடு மண்டலமானது தனது பொன்விழா ஆண்டை முன்னிட்டு உலக அமைதிக்காக 10 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் கூட்டு தியானம் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஹேப்பி வில்லேஜியில் நடைபெறுகிறது. 50 ஆண்டுகளாக 147 நாடுகளில் சேவையாற்றி வரும் பிரம்ம குமாரிகள் இயக்கம் சார்பில் சேவைப் பணிகளை செய்து வருகிறது. அந்த வகையில் உலக அமைதிக்காக கூட்டு தியானம் சென்னையில் 8ம் தேதியும், அதையடுத்து 9ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சுங்குவார்சத்திரம் அருகில் உள்ள ஹாப்பி வில்லேஜியில் நடைபெறுகிறது.

இதில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய அமைச்சர்கள் மற்றும் மாநில அமைச்சர்கள் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர்.

நாங்கள் உலக நாடுகளுக்கு சுற்றி வந்திருக்கிறோம் ஆனால் வட இந்தியாவான கல்கத்தாவில் காளி பூஜை, தென்னிந்தியாவில் மீனாட்சி அம்மனும் என பழமையிலும் பழமை மாறாமல் பாரம்பரியமிக்க சனாதன தர்மத்தை இந்தியா கடைப்பிடித்து வருகிறது,

உலகம் முழுவதும் பல்வேறு கோவில்களை கட்டினாலும் தென்னிந்தியா தமிழகத்தில் இருந்து தான் பூசாரிகளும், அர்ச்சகர்களை கொண்டு தான் பூஜை செய்யும் அளவுக்கு சிறந்த பூஜை முறைகள் இருக்கிறது.

மேலும் உலக நாடுகளிலே அதிக அளவில் சிவன் கோயில் உள்ள பகுதி தமிழ்நாடு என்பதும் போற்றுதலுக்கு உரியதாகும். ஆகவே இறைவன் ஒருவனே; உலக நாடுகள் அனைத்தும் ஒரு குடையின் கீழ்; நாம் அனைவரும் சகோதர சகோதரி என்ற உன்னத நோக்கத்தோடு இந்த பிரம்மக்குமாரிகள் இயக்கம் வெற்றி நடைபோட்டு வருகிறது.

பொன்விழா கொண்டாட்டங்களின் போது நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான கல்பதரு திட்டம் தொடங்கி வைத்தல் முக்கியத்துவம் வாய்ந்த மணல் நல திட்டமான எங்கள் சரியான தீர்வு உறுதிமொழியுடன் கூடிய ஐந்து அம்ச திட்டத்தை தொடங்கி வைத்தல் மற்றும் சிறப்பு மலர் வெளியிடுதல் என பல நிகழ்வுகள் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தனர்

இதில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவித்தனர்.

Updated On: 7 Oct 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...