/* */

காஞ்சிபுரத்தில் மது பாட்டில்கள் கடத்திய 10 பேர் கைது, 400 மது பாட்டில்கள் பறிமுதல், போலீஸ் அதிரடி

காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் பகுதிகளில் நடைபெற்ற வாகன சோதனையில் சட்டவிரோதமாக எடுத்துவந்த 400 மது பாட்டில்களை காவல்துறை பறிமுதல் செய்து இது தொடர்பாக 5 பிரிவு வழக்குகளில் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் மது பாட்டில்கள் கடத்திய 10 பேர் கைது, 400 மது பாட்டில்கள் பறிமுதல், போலீஸ் அதிரடி
X

காஞ்சிபுரத்தில் மது பாட்டில்கள் கடத்தியதாக கைது செய்யப்பட்டவர்கள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்வோர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் . எம். சுதாகர் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் பாலுசெட்டி காவல் நிலைய ஆய்வாளர் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கீழம்பி சாலை சந்திப்பில் வாகன சோதனை மேற்கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த ஆட்டோவை மறித்து சோதனை மேற்கொண்ட போது அதில் 284 மதுபாட்டில்களை கடத்தி செல்வதாக தெரியவந்தது .

இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த தினேஷ்குமார், பிரபு ஹரிஹரன், கிருஷ்ணகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் வாலாஜாபாத் மற்றும் ராஜகுளம் பகுதியில் வாலாஜாபாத் காவல் ஆய்வாளர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த வாலிபர்களை மடக்கி சோதனை செய்தபோது மதுபாட்டில்கள் கடத்தி செல்வது தெரியவந்தது.

அவரது வாகனத்திலிருந்து 70 மது பாட்டில்களை பறிமுதல் செய்து இது தொடர்பாக அர்ஜுன் ராஜ், கமல் பாஷா ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல பகுதியில் நேற்று நடைபெற்ற வாகன சோதனையில் மொத்தம் 400 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 5 வழக்குகள் பதியப்பட்டு அது தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.எம். சுதாகரன் தெரிவித்துள்ளார்

Updated On: 4 July 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...