/* */

விடுதலை சிறுத்தைகள் கட்சியை கண்டித்து பாஜக, இந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்

பல நூற்றாண்டுகளைக் கடந்த சங்கர மடத்தினை இடித்து தள்ளுவோம் என கூறிய விசிக மாவட்ட செயலாளர் எழிலரசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

விடுதலை சிறுத்தைகள் கட்சியை கண்டித்து பாஜக, இந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்
X

விசிக.,வை  கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜக மற்றும் இந்து முன்னணி கைது செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சங்கர மடத்தின் எதிரே கடந்த வாரம் விசிக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு இல்லாமல் இருந்திருந்தால் கூட்டத்தில் கூடியுள்ள நூற்றுக்கும் மேற்பட்டோர் சங்கர மடத்தை அடித்து நொறுக்கி செங்கல் செங்கலாக பிரித்து விடுவோம் என விசிக காஞ்சிபுரம் மாவட்ட புறநகர் செயலாளர் எழிலரசனை பேசினார்.

இதே போல் , சனாதன தர்மமான இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசி இழிவுபடுத்திய, இந்து விரோத தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் சங்கர் மடம் அருகே பாஜக மாவட்ட தலைவர் பாபு தலைமையில் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சனாதானத்தை எதிர்க்கும் இழிவுபடுத்தும் திக, திமுக, விசிக ஆகிய கட்சிகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி கண்டனத்தை தெரிவித்தனர்.

இதில் பங்கேற்ற பாஜக நிர்வாகிகள் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசி வருவது கண்டிக்கத்தக்கது எனவும், பல நூற்றாண்டுகளாக இந்து தர்மத்திற்காக பாடுபட்டு வரும் சக்கர மடத்தை தகர்ப்போம் எனக் கூறியது மிகவும் கண்டிக்கத்தக்கது என மாவட்ட தலைவர் பாபு தெரிவித்தார்.

Updated On: 7 Sep 2023 9:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்