/* */

காஞ்சிபுரம் அண்ணா புற்றுநோய் மருத்துவமனைக்கு தன்னாட்சி அதிகாரம்

Anna Hospital Kanchipuram-காஞ்சிபுரம் அண்ணா புற்றுநோய் மருத்துவமனைக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

Anna Hospital Kanchipuram
X

Anna Hospital Kanchipuram

Anna Hospital Kanchipuram-சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் நுழைவு வாயிலின் முன்பு அமைந்துள்ளது பேரறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம். பல நூற்றாண்டுகளாக தமிழகம் மட்டும் இல்லாமல் பிற மாநிலங்கள் , நாடுகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் புற்றுநோய் பாதிப்பு சிகிச்சை அளித்து வருவதில் சிறந்து விளங்கி வருகிறது.

தற்போது 290 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வரும் இந்த மருத்துவமனையை தமிழக அரசு தரம் உயர்த்த இந்த மருத்துவமனை வளாகத்திலேயே அதிநவீன வசதிகளை கொண்ட கட்டிடங்கள் , சிகிச்சை அளிக்க அதிநவீன கருவிகள் அமைக்க புதிய கட்டிட மையம் அமைக்கவும் ஒரே நேரத்தில் 750 நோயாளிகள் சிகிச்சை பெரும் வகையில் அமைக்கபடவுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இதற்கான அறிவிப்பை சட்டப்பேரவையில் அறிவித்து நிதி ஒதுக்கப்படும் என தெரிவித்தார்.

பணிகள் விரைவாக தொடங்கிய நிலையில் அமைச்சர் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் என பல அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.

சுமார் 250 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இந்த புற்றுநோய் மருத்துவமனைக்கு தன்னாட்சி அதிகாரமும் வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து மருத்துவர் கூறுகையில் கூடுதல் நிதி தன்னாட்சி அதிகாரம் இவை அனைத்தும் மருத்துவமனையை உலக அளவில் பெயர் எடுக்கும் வகையில் ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரியில் உள்ள ஜிப்பர் கேரளாவில் உள்ள ரீஜனல் கேன்சர் சென்டர் போல் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையும் தன்னாட்சி அதிகாரத்தால் சிறந்து விளங்கும் இதன் வாயிலாக நேரடியாக பணி நியமனம் செய்யலாம் தமிழகத்தில் சிறப்பு பெற்ற ஒரே புற்றுநோய் மருத்துவமனையாக மாறும் தன்னாட்சி அதிகாரத்தின் மூலம் கொள்கை விளக்கம் சிகிச்சை புரோட்டாக்கால் ஆகியவை இந்த மருத்துவமனையில் இருந்து வழங்கப்படும் தமிழகம் முழுவதும் அவற்றை பின்பற்றும் நிலை உருவாகியுள்ளது.

இது மட்டும் இல்லாமல் ஆண் பெண் நோயாளியுடன் வரும் நபர்கள் தங்குவதற்கு உரிய வசதிகளும் இத்திட்டத்தில் உள்ளது.

குறிப்பாக குழந்தைகளுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டாலும் மூளை புற்றுநோய் ரத்த புற்று நோய் ஆகிய பாதிப்புகளுக்கு தற்போது ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்லும் நிலையில் , தற்போது நவீனமயம் ஆக்கப்பட்டு வருவதால் இம்ம மருத்துவமனை துவங்கியவுடன் இதற்கான சிகிச்சைகளை காஞ்சிபுரத்தில் அளிக்கும் வகையில் மருத்துவர்களும் மருத்துவ உபகரணங்களும் அமைந்துள்ளது.

தொடர்ச்சியாக மருத்துவமனைக்கு கூடுதல் நிதி உதவி சிறந்த புற்றுநோய் சிகிச்சைக்கான மருத்துவமனை என பெயர் பெரும் எனவும், தற்போது தலைசிறந்த அறுவை சிகிச்சை நிபுணர்களும் செவிலியர்களும் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களுடன் இணைந்து தமிழக அரசு அளிக்கும் ஊக்கமும் இம் மருத்துவமனை நோயற்ற வாழ்வு வாழ அனைத்து வகையிலும் பொதுமக்களுக்கு சேவை செய்யும் என தெரிவித்தார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 15 April 2024 6:36 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  4. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  5. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  6. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  7. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  8. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  9. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  10. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்