/* */

கிராம, பகுதி சபா கூட்டங்கள் அரசு விதிகள் மீறலா ?

Grama Sabha Meeting -கிராம மற்றும் பகுதி சபாக்கள் நடத்த பட அறிவுரை வழங்கியதில், முக்கிய ஒன்றான வழிபாட்டு தலங்களை தவிர்க்க வேண்டும் என்பது மிக முக்கியமான அறிவுரையாக இருந்தது.

HIGHLIGHTS

கிராம, பகுதி சபா கூட்டங்கள் அரசு விதிகள்  மீறலா ?
X

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 39 வது வார்டு பகுதியில் நடைபெற்ற பகுதி சபா கூட்டம் அங்குள்ள அம்மன் கோயிலில் நடைபெற்றது.

Grama Sabha Meeting -தமிழகமெங்கும் கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி உள்ளாட்சி தினத்தை ஒட்டி கிராம சபை கூட்டங்கள் நடத்த அரசு அறிவுறுத்தியது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில் கிராம சபை கூட்டங்கள் போல் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் முதல் முறையாக மாநகராட்சி நகராட்சி பேரூராட்சிகளிலும் பகுதி சபை கூட்டங்கள் நடைபெறும் என அறிவித்து அதற்கான வழிகாட்டும் முறைகளையும் உள்ளாட்சி , நகராட்சி நிர்வாக துறை சார்பில் வெளியிடப்பட்டது.

மேலும் அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் முக்கியமாக எந்த வழிபாட்டுத் தலங்களில் கிராம மற்றும் பகுதி சபா கூட்டங்கள் நடைபெறக்கூடாது என முக்கிய அறிவாளியாக வழங்கப்பட்டு அது குறித்த அறிக்கைகள் அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் அதேபோல் மாநகராட்சி , நகராட்சி , பேரூராட்சிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

மேலும் இதை முக்கியமாக அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் தற்போது நிலவி வருவதால் , அதனை பின்பற்றுவதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கவனம் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத் அடுத்த கட்டவாக்கம் பகுதியில் கிராம சபை கூட்டம் சர்ச் பகுதியில் நடைபெற்றதாக புகார் எழுந்து வருகிறது.

இதேபோல் மாநகராட்சியில் முதல் முறையாக இது போன்ற பகுதி சபா கூட்டங்கள் நடைபெறுகிறது. அனைத்து பகுதிகளிலும் உள்ள திருமண மண்டபங்கள் மற்றும் பொது இடங்களில் நடைபெற்று வரும் நிலையில் 39 ஆவது வார்டு பகுதியில் உள்ள அம்மன் திருக்கோயில் நேற்று பகுதி நடைபெற்றதாக கூறப்படுகிறது.

குறுகிய காலத்தில் இது போன்ற பகுதி சபா அமைக்கப்பட்டு கூட்டம் நடைபெறுவதால் உரிய வழிகாட்டு முறைகளை இவர்கள் அறிந்து கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது என்பதால் இனி வரும் காலங்களில் இதனை தவிர்த்தால் அதிக அளவில் பொதுமக்கள் கூடுவார்கள். திருக்கோயில்களில் கூட்டம் நடந்தால் பிற மதத்தினர் வருவது என்பது சிறிது யோசனை செய்யப்பட வேண்டிய விஷயம் என்பதும், அனைவருக்கும் பொதுவான இடத்தில் நடைபெறுவது எந்த ஒரு பிரச்சினைகளும் தீர்வு காணவும் , அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வழிவகுக்கும் என்பதால் இதனை கட்டாயம் இனிவரும் காலங்களில் கடைபிடிக்க வேண்டும் என மாநகராட்சி அவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.

கிராம ஊராட்சிகள் இது போன்ற வழிகாட்டு நெறிமுறை கடைபிடிக்க தவறி இருந்தால் அவர்கள் மீதும் கண்டிப்பாக எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனும் கோரிக்கை எழுந்துள்ளது.

வடகிழக்கு பருவமழையின் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக விடுமுறை விடப்பட்டு இருந்த நிலையில் பள்ளி வளாக வகுப்பறைகளில் இதை நடத்தி இருக்கலாம் . இனி வரும் காலங்களில் மத வழிபாட்டு தலங்களில் நடத்துவதை தவிர்க்கலாமே..


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 3 Nov 2022 7:31 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...