/* */

அறம்வளத்தீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்

அம்பாள் பார்வதி தேவியரும் தேவர்களும் ரிஷிகளும் முனிவர்களும் இவ்வுலகில் அறம் செழிக்க வேண்டி பூஜித்து தவமிருந்த தலம் இது.

HIGHLIGHTS

அறம்வளத்தீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
X

காஞ்சிபுரம் அறம் வளத்தீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்ற பிறகு சிறப்பு தீபாராதனை பொதுமக்களுக்கு காண்பிக்கப்பட்ட போது.

காஞ்சிபுரத்தில் 52 ஆண்டுகளுக்குப் பிறகு அறம் வளத்தீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறையருள் பெற்றனர்.

கோயில் நகரம், முக்தி தரும் நகரங்களில் முதன்மையானதுமான நகரேஷு காஞ்சி என்ற போற்றக் கூடியதும் கச்சி திருநகர் கண் உயிர்கள் உய்யும் பொருட்டு திருவருளே திருமேனியாக கொண்டு எழுந்தருளியிருக்கும் சிவ தலங்கள் பல காஞ்சியில் உள்ளது.

அவற்றுள் சீரும் சிறப்புமுடையதும் , அம்பாள் பார்வதி தேவியரும் 30 முக்கோடி தேவர்களும் ரிஷிகளும் முனிவர்களும் இவ்வுலகத்தில் அறம் செழிக்க வேண்டி பூஜித்து தவமிருந்த தளமாக விளங்கக்கூடிய அறம் வளத்தீஸ்வரன் திருக்கோயில் கடந்த ஓராண்டுகளுக்கு மேலாக பல லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வந்தது.

பணிகள் நிறைவு பெற்ற பின், கடந்த திங்கள்கிழமை கணபதி ஓமத்துடன் யாகசாலை பூஜை தொடங்கி ஒரு கால பூஜை நேற்று நிறைவு பெற்றது.

இதனைத் தொடர்ந்து இன்று காலை 9 மணிக்கு மஹாபூர்ணா ஹுதி, யாத்திராதானம் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்ற பின் சிவாச்சாரியார்களால் கலச புறப்பாடு கண்டு திருக்கோயிலை பலம் வந்து ராஜகோபுரம், மூலவர் விமானம், மூலவர் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு மேல தாளங்கள் முழங்க வானவேடிக்கையுடன் மகா கும்பாபிஷேக புனித நீர் கலசங்களுக்கு ஊற்றி விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு பகல் 12:00 மணி அளவில் மூலவருக்கு சிறப்பு மகா அபிஷேகம் பல்வேறு வாசனை திரவிய அர்ச்சனை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானங்கள் வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு சுவாமி திருக்கல்யாண விசேஷ தரிசனம் மற்றும் புறப்பாடு வீதி உலா நடைபெற உள்ளது.

திருக்கோயில் புனரமைப்பு பணி மற்றும் கும்பாபிஷேக பணிகளை திருப்பணி குழு தலைவர் முத்துசாமி பொருளாளர் பெருமாள், செயலாளர் குமரேசன் , செயல் அலுவலர் நடராஜன், துணைச் செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், லட்சுமணன் , பொருளாளர் வெங்கடேசன் மற்றும் விழா குழு நண்பர்கள் மற்றும் செங்குந்த பரப்பினர்கள், சிவபக்தர்கள் இணைந்து சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Updated On: 27 March 2024 5:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  2. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  3. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  4. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  5. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  6. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!
  7. தமிழ்நாடு
    22 மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு
  8. லைஃப்ஸ்டைல்
    தம்பதிகள் பிறந்த நாள் கவிதைகள் இதோ..!
  9. வீடியோ
    🔴LIVE : வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வோருக்கு மத்திய அமைச்சர்...
  10. லைஃப்ஸ்டைல்
    எனதுயிர் நண்பனே உனதுயிர் என் வசம்..!